/tamil-ie/media/media_files/uploads/2020/03/template-2020-03-23T151927.651.jpg)
pmay scheme for middle income group , pmay income group, pmay subsidy scheme details, pmay clss scheme, pmay clss eligibility, pmay clss last date, pmay clss guidelines
நீங்கள் கடன் வாங்கி ஒரு வீடு வாங்க வேண்டும் என நினைக்கிறீர்களா, வட்டியில் மானியம் பெறுவதற்கான கடைசி தேதி நெருங்குகிறது. Pradhan Mantri Awas Yojana (PMAY) Credit-Linked Subsidy Scheme (CLSS) திட்டத்துக்கான கடைசி தேதி மார்ச் 31, 2020 உடன் முடிவடைகிறது. இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில் PMAY திட்டத்தில் விண்ணப்பிக்க ஒருவர் அதற்கான செயல்முறையை சீக்கிரம் துவங்க வேண்டும். CLSS இரண்டு வருமான பிரிவுகளான MIG I மற்றும் MIG II ஆகியவற்றை பூர்த்தி செய்வதால் மானியத் தொகையின் அளவு உங்கள் வருமானத்தை பொருத்தது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
CLSS ல் ரூபாய் 6 முதல் 12 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் MIG-1 திட்டத்தின் கீழும், ரூபாய் 12 முதல் 18 லட்சம் வரை வருமானம் உடையவர்கள் MIG-II திட்டத்தின் கீழும் வருவார்கள். MIG I மற்றும் MIG II பிரிவுகளில் அதிகப்பட்ச மானிய தொகை முறையே ரூபாய் 2,35,068/- மற்றும் ரூபாய் 2,30,156/-. எளிமையாக கூறவேண்டுமானால் நீங்கள் CLSS கீழ் கடன் பெற்றிருந்தால் நீங்கள் சேமிக்க போகும் வட்டியின் அளவு தான் இது.
MIG-I தனிநபர்கள் ரூபாய் 9 லட்சம் வரையான கடன் தொகைக்கு வட்டி மானியமாக 4 சதவிகிதம் வரை பெறுவார்கள், அதேசமயம் MIG II பிரிவினர் ரூபாய் 12 லட்சம் வரையான கடன் தொகைக்கு வட்டி மானியமாக 3 சதவிகிதம் வரை பெறுவார்கள்.
CLSS -PMAY நீங்கள் நன்மையை பெற விரும்பினால் முதலில் உங்கள் தகுதியை வங்கியில் இருந்து சரிபார்கவும். முதல் முறையாக வீடு வாங்கும் ஒருவருக்கு வட்டி விகித மானியத்தை பயன்படுத்த PMAY-CLSS உதவுகிறது மேலும் இது இஎம்ஐ குறைவானதாக வைக்கவும் வட்டி செலவையும் குறைவாக வைத்திருக்கிறது. PMAY-CLSS நிதியாண்டு இறுதி வரை இருப்பதால் ஒருவர் விரைவாக செயல்பட்டு வங்கியை அணுகி திட்டத்துக்கான நன்மையை பயன்படுத்தி குறைந்த விலையில் ஒரு வீட்டை சொந்தமாக்கி கொள்ளலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.