PMAY Tamil News: நாட்டில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் மத்திய அரசு ரூபாய் 25,000/- தருவதாக முகநூல் மற்றும் வாட்ஸ் ஆப்பில் ஒரு தகவல் பரவி வருகிறது. இந்த செய்தியில் ஒரு இணைப்பும் (link) கொடுக்கப்பட்டுள்ளது, அது மக்களை இத்திட்டத்தில் பதிவு செய்வதற்காக எடுத்து செல்வதாக கூறப்பட்டுள்ளது. இந்த இணைப்பு உங்களை ஒரு போலி இணையதளத்துக்கு கொண்டு செல்லும், அங்கு உங்களுடைய தனிப்பட்ட தகவல்கள் எடுக்கப்படும். மேலும் இந்த செய்தியை உங்கள் நணபர்களுடன் வாட்ஸ் ஆப்பில் பகிர சொல்லும். மேலும் இத்திட்டத்துக்கு தகுதி பெற உங்களிடம் ஒரு புதிய ஆப்பை பதிவிறக்கம் செய்து நிறுவச் சொல்லும். ஆனால் பரவி வரும் இந்த செய்தி முற்றிலும் தவறானது. மேலும் இந்த முழு விஷயமும் ஒரு மோசடி.
‘2020 புதிய பட்ஜெட்டின் படி, Pradhan Mantri Awas Yojana திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள ஒரு நபருக்கு ரூபாய் 25,000/- தரப்படுகிறது. உங்கள் குடும்ப உறுப்பினர்கள் யாரும் இந்த திட்டத்தை பயன்படுத்தவில்லை என்றால் படிவத்தை நிரப்ப, கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த இணைப்பை சொடுக்கி ரூபாய் 25,000/- பெற்றுக் கொள்ளவும்”, என்று அந்த போலி செய்தியில் சொல்லப்பட்டு இருக்கும்.
“pmyojna.ssctechnical.com”, என்ற அந்த இணைப்பை நீங்கள் சொடுக்கினால், அது உங்களை ஒரு இணையதளத்துக்கு கொண்டு செல்லும். அங்கு Pradhan Mantri Awas Yojana (Prime Minister Housing Scheme) Shahri (urban) மற்றும் Gramin (rural) ஆகிய திட்டங்கள் குறித்த பதாகைகள் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி புகைப்படமும் இடம்பெற்றிருக்கும். மேலும் உங்களுடைய பெயர், தொலைபேசி எண், முகவரி, பின்கோடு ஆகிய தகவல்களை ஒரு சின்ன படிவம் மூலம் நிரப்ப கேட்கப்படும்.
இந்த திட்டத்துக்கான கடைசி தேதி 30 ஏப்ரல் 2020 வரை மட்டுமே என்றும் இந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கும்.
இந்த ஏமாற்று வேலையை எப்படி கண்டுபிடிப்பது?
இந்த வகையான ஏமாற்று வேலைகள் மிகவும் பொதுவானது. இந்த போலி செய்தியுடன் forward செய்யப்படும் இந்த இணையதளத்தின் URL, முழு விஷயமும் ஒரு மோசடி என்பதை கூறுகிறது. இந்திய அரசின் அனைத்து அதிகாரப்பூர்வ இணையதள முகவரிகளும் (dot)gov(dot)in அல்லது (dot)nic.(in) என்றே முடிவடையும். ஆனால் இந்த போலி இணையதளத்தின் முகவரி (dot)com என்று முடிவடைகிறது. மேலும் Pradhan Mantri Awas Yojana திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரி “pmaymis.gov.in”. pmyojna.ssctenchical.com. என்பது இல்லை.
இந்திய அரசு இது போன்ற எந்த திட்டத்தையும் அறிவிக்கவில்லை. மேலும் அந்த போலி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் எதுவும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இல்லை. மேலும் இந்த இணையதளத்தை நீங்கள் கவனமாகப் பார்த்தால் மொத்தமும் போலி என்பது எளிதில் புரியும்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook
Web Title:Pmay tamil news pradhan mantri awas yojana housing scheme pm awas yojna fake website