PMAY Tamil News: நீங்கள் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (Pradhan Mantri Awas Yojana -PMAY) திட்டத்தின் கீழ் ஒரு வீட்டை வாங்க விரும்பினால் அதை Credit Linked Subsidy Scheme -CLSS கீழ் வாங்குவதை பரிசீலிக்கலாம். அரசு மலிவு விலை வீட்டு வசதியின் காலக்கெடுவை அரசாங்கம் மார்ச் 31, 2021 வரை நீட்டித்துள்ளது.
Pradhan Mantri Awas Yojana: பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா என்றால் என்ன?
நகர்புறங்களில் உள்ள அனைவருக்கும் வீட்டு வசதியை உறுதி செய்வதற்காக 25 ஜீன் 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது தான் இந்த பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (நகர்புற) திட்டம். இந்த திட்டத்தின் கீழ் அனைத்து தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கு 2022 ஆம் ஆண்டுக்குள் தரமான வீடுகளை வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
பெண் குழந்தைகள் வைத்திருப்பவர்கள் இந்த திட்டத்தை தெரிந்துக் கொள்வது அவசியம்!
கடனுடன் இணைக்கப்பட்ட மானிய திட்டம் (Credit Linked Subsidy Scheme -CLSS) திட்டம் என்றால் என்ன?
நடுத்தர வருவாய் பிரிவினருக்கான (Middle Income Group - MIG) கடனுடன் இணைக்கப்பட்ட மானிய திட்டம் MIG I மற்றும் MIG II க்கான CLSS முதலில் 2017 ஆம் ஆண்டு செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. தற்போது இந்த திட்டம் மார்ச் 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வீட்டு கடன் கோரும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர், குறைந்த வருவாய் பிரிவினர், நடுத்தர வருவாய் பிரிவினர் - I மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினர் - II ஆகியோருக்கு இந்த திட்டத்தின் கீழ் வட்டி மானியம் ரூபாய் 2.67 லட்சம் வரை ஒரு வீட்டுக்கு பயனாளிக்கு அனுமதிக்கப்படுகிறது.
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜன திட்டத்தின் கீழ் யார் எல்லாம் தகுதியானவர்கள் ?
இந்த திட்டம் முதன்மையாக அனைவருக்கு வீட்டு வசதி வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. எனவே ஏற்கனவே ஒரு வீட்டை சொந்தமாகக் கொண்டவர்கள் அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்கள் யாராவது ஒரு வீட்டை வைத்திருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு இந்த திட்டத்தின் நன்மையை பெற தகுதி கிடையாது.
திட்டத்தில் EWS LIG MIG பிரிவினருக்கான அளவுகோல் என்ன?
பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கான ஆண்டு வருமானம் ரூபாய் 3 லட்சம் வரை இருக்க வேண்டும். குறைந்த வருவாய் பிரிவினருக்கான ஆண்டு வருமானம் ரூபாய் 3 லடசத்திலிருந்து ரூபாய் 6 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். நடுத்தர வருவாய் பிரிவினருக்கான (MIG I) ஆண்டு வருமானம் ரூபாய் 6 லட்சம் முதல் ரூபாய் 12 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். MIG II க்கான ஆண்டு வருமானம் ரூபாய் 12 லட்சம் முதல் ரூபாய் 18 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
எஸ்பிஐ கொடுத்த திடீர் ஷாக்... இந்த நேரத்தில யாரும் இதை எதிர்பார்க்கல!
எவ்வளவு வட்டி மானியத்தை ஒருவர் பெறலாம்?
ரூபாய் 9 லட்சம் மற்றும் ரூபாய் 12 லட்சம் வரை கடன் தொகையில் 4 சதவீதம் மற்றும் 3 சதவீதம் வட்டி மானியங்கள் முறையே MIG I மற்றும் MIG II க்கு அனுமதிக்கப்படுகின்றன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.