மத்திய அரசு நிவாரணத் தொகுப்பு: 32 கோடி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூ 28 ஆயிரம் கோடி
Pradhan Mantri Garib Kalyan Yojana Corona Relief: ரூபாய் 28,256 கோடி ரொக்க தொகை அல்லது 17 சதவிகித அளவிலான மதிப்பு, 31.77 கோடி பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுவிட்டது
Pradhan Mantri Garib Kalyan Yojana Corona Relief: ரூபாய் 28,256 கோடி ரொக்க தொகை அல்லது 17 சதவிகித அளவிலான மதிப்பு, 31.77 கோடி பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுவிட்டது
PMGKY Tamil News, PMGKY Tamil Nadu News, PMGKY News In Tamil, PMGKY Corona Relief, பிரதம மந்திரி பயிர் பாதுகாப்பு திட்டம்
PMGKY Tamil News: ஏப்ரல் 10 ஆம் தேதி நிலவரப்படி மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ரூபாய் 1.7 லட்சம் கோடி தொகுப்பில் ரூபாய் 28,256 கோடி ரொக்க தொகை அல்லது 17 சதவிகித அளவிலான மதிப்பு, 31.77 கோடி பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுவிட்டது.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
ஊரடங்குக்கு மத்தியில் ஏழைகளுக்கு உதவிச் செய்யும் வகையில், Pradhan Mantri Garib Kalyan Yojana (PMGKY) திட்டத்தின் கீழ் இந்த நிவாரண தொகுப்பை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மார்ச் 26 ஆம் தேதி அறிவித்தார்.
Advertisment
Advertisements
Pradhan Mantri Garib Kalyan Yojana Corona Relief: திட்டமிட்ட செலவினங்களில் சிலவற்றை முன் ஏற்றுதல்
மத்திய அரசு ரூபாய் 13,855 கோடியை முதல் தவணை தொகையாக தலா ரூபாய் 2,000/- வீதம் 6.93 கோடி விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்துள்ளது, என நிதி அமைச்சகம் டிவிட்டர் வாயிலாக தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மத்திய அரசு மூன்று தவனைகளாக ஒரு வருடத்துக்கு ரூபாய் 6,000 த்தை ஒவ்வொரு விவசாயிக்கும் வழங்கி வருகிறது.
மேலும் ரூபாய் 5,00/- வீதம் 19.86 கோடி பெண் Jan Dhan கணக்கு வைத்திருப்பவர்களுக்கு (மொத்த பயனாளிகளில் 97 சதவிகித) ரூபாய் 9,930 கோடி பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மேலும் இரண்டு தவணைகள் வரும் மாதங்களில் கொடுக்கப்படும்.
மூத்த குடிமக்கள், விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளி மக்களுக்கு ஒருமுறை மானியமாக ரூபாய் 1,000/- வழங்கும் திட்டத்தின் கீழ் மத்திய அரசு ரூபாய் 1,405 கோடியை 2.82 கோடி பயனாளிகளுக்கு நேரடி பரிமாற்ற (direct benefit transfer) முறையில் வழங்கியுள்ளது.
கட்டிடம் மற்றும் பிற கட்டுமான தொழிலாளர்களுக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் ரூபாய் 3,066 கோடி தொகை 2.16 கொடி பயனாளிகளுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த தொகுப்பின் ஒரு பகுதியாக மத்திய அரசு மாநில அரசுகளை அவர்களிடம் கட்டிடம் மற்றும் பிற கட்டுமான தொழிலாளர்கள் நல நிதியின் கீழ் உள்ள தோராயமாக ரூபாய் 31,000 கோடியை அந்த தொழிலாளர்களை பொருளாதார நெருக்கடிகளிலிருந்து பாதுகாக்க பயன்படுத்த சொல்லியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil