PMJDY SBI News: வதந்திகளை நம்ப வேண்டாம் என்று மக்களை வலியுறுத்துவதோடு, பெண்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு PMJDY கணக்குகளிலும் ஏப்ரல் மாதத்துக்கான ரூபாய் 500/- டெபாசிட் செய்யப்பட்டு விட்டதாகவும், கூடுதலாக ரூபாய் 1,000/- வரும் இரண்டு மாதங்களில் சமமான தவணைகளில் கொடுக்கப்படும் என்றும் மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது
அதிக எண்ணிக்கையிலான மக்கள் வங்கி கிளைகளில் திரண்டு வரும் சூழலில், வங்கி கணக்கிலிருந்து பணத்தை எடுக்கவில்லை என்றால் அரசு திரும்ப எடுத்துவிடும் என்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்று, அதிக எண்ணிக்கையிலான PMJDY கணக்குகளை வைத்துள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கியான எஸ்பிஐ பயனாளிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
Pradhan Mantri Jan Dhan Yojana SBI Account: பாரத ஸ்டேட் வங்கி விளக்கம்
இதன் விளைவாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக பின்பற்ற வேண்டிய சமூக இடைவெளியை மீறும் விதமாக வங்கி கிளைகளில் பெரும் கூட்டம் கூடுகிறது.
ஏப்ரல் மாதத்துக்கான ரூபாய் 5,00/- ஐ பெண்கள் வைத்திருக்கும் PMJDY கணக்குகளில் அரசு டெபாசிட் செய்துவிட்டது. பயனாளிகள் அதை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்று நிதி சேவைகள் துறை (Department of Financial Services) டிவிட்டர் வழியாக தெரிவித்துள்ளது.
இந்த தொகை (ரூபாய் 500/-) உங்கள் வங்கி கணக்கை வந்தடைந்துவிட்டது. அதை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். மேலும் மே மற்றும் ஜூன் மாதத்திலும் ரூபாய் 500/- டெபாசிட் செய்யப்படும், என்று மேலும் தெரிவித்துள்ளது.
பயனாளிகள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அவர்களுடைய வசதியை பொருத்து ஏடிஎம் மூலமாகவோ அல்லது வாடிக்கையாளர் சேவை மையம் மூலமாகவோ அல்லது வங்கிகளிலிருந்தோ எடுத்துக்கொள்ளலாம் என்றும் நிதி அமைச்சகத்தில் உள்ள நிதி சேவைகள் துறை மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.
Pradhan Mantri Jan Dhan Yojana (PMJDY) திட்டத்தில் மொத்தம் உள்ள 38.08 கோடி கணக்குகளில் 20.60 கோடி கணக்குகளை பெண்கள் வைத்துள்ளனர். ஏப்ரல் 1 ஆம் தேதி நிலவரப்படி PMJDY கணக்குகளில் வைப்பு ரூபாய் 1.19 லட்சம் கோடிக்கு மேல் உள்ளது.
உங்கள் கணக்குகளில் உள்ள நிதி தடுக்கப்படாது அல்லது அரசுக்கு திருப்பி அனுப்பப்படாது என எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் உறுதியளிக்க விரும்புகிறோம் என்று எஸ்பிஐ வங்கி மேலும் கூறியுள்ளது.
PMJDY கணக்குதாரர்கள் தங்கள் பணத்தை எப்போது வேண்டுமானாலும் தங்கள் வசதிக்கு ஏற்ப எடுத்துக் கொள்ளலாம் என எஸ்பிஐ மேலும் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட ரூபாய் 1.70 லட்சம் கோடி நிவாரண தொகுப்பின் ஒரு பகுதியாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதை அறிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.