pmjdy online apply, pradhan mantri jan dhan yojana, pradhan mantri jan dhan yojana online account opening, பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா
Pradhan mantri jan dhan yojana online account opening: ஒரு நல்ல செய்தி ! உங்கள் பழைய வங்கி கணக்கை ஜன்தன் கணக்காக மாற்றி அரசு தரும் இந்த சிறப்பு வசதிகளைப் பெறுங்கள். ஜன்தன் கணக்கு வைத்திருப்பவர்கள் overdraft ஆக ரூபாய் 10,000/- வரை தங்கள் கணக்கிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். PMJDY உங்களுக்கு ரூபாய் 2 லட்சம் வரையிலான விபத்து காப்பீட்டு பாதுகாப்பை வழங்குகிறது.
Advertisment
மத்திய அரசு மற்றொரு தவனையாக ரூபாய் 500’ஐ ஜன்தன் (Jan Dhan) கணக்கு பெண் பயனாளிகளுக்கு அனுப்பியுள்ளது. கோவிட்-19 ஊரடங்குக்கு மத்தியில் அரசு நாட்டிலுள்ள ஏழை மக்களுக்கு நிதி உதவியை வழங்குகிறது. ஜன்தன் கணக்கை திறப்பது எளிமையானது. இருப்பினும் உங்கள் பழைய கணக்கை ஜன்தன் கணக்காக மாற்ற விரும்பினால் அதன் செயல்முறை மிக எளிதானது. எப்படி என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டுமா ?
உங்கள் பழைய கணக்கை ஜன்தன் கணக்காக மாற்றுவது எப்படி ?
Advertisment
Advertisements
Step 1: வங்கி கிளைக்கு செல்லவும்.
Step 2: பின்னர் ஒரு படிவத்தை பூர்த்தி செய்து RuPay அட்டைக்கு விண்ணப்பிக்கவும்
Step 3: பூர்த்தி செய்தவுடன் அதை வங்கியில் சமர்பிக்கவும்.
Step 4: இதன் பிறகு உங்கள் வங்கி கணக்கு ஜன்தன் கணக்காக மாற்றப்பட்டுவிடும்.
ஜன்தன் கணக்கின் நன்மைகள் என்ன ?
தனது பெண் பயனாளர்களுக்கு ஜன்தன் கணக்கு பெரும் நன்மைகளுடன் வருகிறது.
ஜன்தன் கணக்கில் வைப்புத்தொகைக்கு வட்டி கிடைக்கிறது.
பயனாளிக்கு இலவச கைபேசி வங்கி சேவை (mobile banking) வசதி கணக்குடன் கிடைக்கிறது.
ஜன்தன் கணக்கு வைத்திருப்பவர்கள் overdraft ஆக ரூபாய் 10,000/- வரை தங்கள் கணக்கிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். எனினும் ஜன்தன் கணக்கை முறையாக சில மாதங்கள் பராமரித்த பின்னரே இந்த வசதியைப் பெற முடியும். PMJDY உங்களுக்கு ரூபாய் 2 லட்சம் வரையிலான விபத்து காப்பீட்டு பாதுகாப்பை வழங்குகிறது.
மேலும், ரூபாய் 30,000/- வரை ஆயுள் பாதுகாப்பு, பயனாளியின் மரணம் குறித்த தகுதி நிபந்தனைகளை நிறைவுசெய்ததும் கிடைக்கிறது
பயனாளிகள் எளிதாக காப்பீடு மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றை ஜன்தன் கணக்கு மூலமாக வாங்க முடியும்.
PMJDY கணக்கில் குறைந்தபட்ச இருப்பு (minimum balance) எதுவும் பராமரிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் காசோலை புத்தகம் (chequebook) வசதி உங்களுக்கு வேண்டுமானால் நீங்கள் குறைந்தபட்ச இருப்பை பராமரிக்க வேண்டும்.
PMJDY புதிய கணக்கை எவ்வாறு திறக்க வேண்டும்?
ஜன்தன் கணக்கு திறக்க விருப்பமுள்ளவர்கள் அருகில் உள்ள வங்கி கிளைக்கு சென்று அதற்குரிய படிவத்தை நிரப்பிக் கொடுத்து, தேவையான ஆவணங்களையும் சமர்பித்து கணக்கை திறக்க வேண்டும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"