தமிழகத்தில் முக்கிய உணவான இட்லி தான் சிறந்த காலை உணவாக கருதப்படுகிறது. நோயாளிகள் முதல் அறுவை சிகிச்சை செய்தவர்கள் கூட திட உணவாக இட்லியை சாப்பிடலாம் என்று கூறப்படுகிறது. இட்லியில் கார்போஹட்ரேட், புரத சத்து, என்ற முக்கிய சத்துகள் நிறைவந்துள்ளது.
தற்போது அதிகமானோர் கடையில் இட்லி மாவு வாங்குகின்றனர். இந்நிலையில் இந்த மாவு புளித்து போகாமல் தவிர்க்க, கால்சியம் சிலிக்கேட் என்ற ரசாயின பொருள் சேர்க்கப்படுகிறது. இதனால் குடல் பிரச்சனை, சீரணக் கோளாறு, வயிற்றுப்போக்கு பல உபாதைகள் ஏற்படுகிறது. சிலருக்கு வயிற்று வலி, வயிற்றுப்போக்கு வரை ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது.
வீட்டிலேயே மாவு அரைத்தாலும், 1 வாரம் வரை ப்ரிஜில் வைத்தால், குடலில் உள்ள இயற்கையாக உள்ள நுண்ணியிரிகளை, இது வளர உதவாது. கெட்ட பாக்டீரியாவை வளரச் செய்யும். இதனால் வீட்டில் மாவு அரைத்தாலும், 2 நாட்களுக்கு மேலாக அதை ப்ரிஜில் வைத்து பயன்படுத்த வேண்டாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். முடிந்த வரை பாக்கெட் இட்லி – தோசை மாவை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அப்படி பயன்படுத்தினாலும், அது அரைத்த எவ்வளவு நாட்கள் ஆனது என்பதை தெரிந்துகொண்ட பின்பு பயன்படுத்தலாம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.