By: WebDesk
Updated: January 19, 2021, 09:40:56 AM
podi idli recipe podi idli tamil ,
podi idli recipe podi idli tamil : பொடி இட்லி இப்பொழுது அனைத்து உணவகங்களிலும் பிரபலமாக உணவாக உள்ளது.
பொடி இட்லி என்பது சின்ன சின்ன இட்லிகள் அல்லது சிறிய துண்டுகளாக நறுக்கிய இட்லியுடன் கடுகு, கருவேப்பிலை தாளித்து, இட்லி பொடி மற்றும் நெய் அல்லது நல்லெண்ணெய் கொண்டு மிதமான சூட்டில் கிளறி, நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறப்படுகிறது. அதனை நீங்கள் அப்படியே அல்லது தயிர் பச்சடியுடன் சாப்பிடலாம்.
செய்முறை
கறிவேப்பிலை இலைகளை கழுவி காயவைத்து இரண்டு மூன்று நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் வறுக்கவும் அல்லது கறிவேப்பிலை இலைகள் சுருண்டு வரும்வரை வறுக்கவும்.
காய்ந்த மிளகாயை மிதமான சூட்டில் வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.
அடுத்து அதில் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வறுத்து எடுக்கவும்.
பின்னர் கடலை பருப்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றை சேர்த்து மிதமான சூட்டில் சில நிமிடங்களுக்கு வறுத்து எடுக்கவும்.
வறுத்த பொருட்களை ஆற வைத்து ஆறியதும் உப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து ஒரு மிக்சியில் கரகரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
இப்பொழுது இட்லி பொடி தயார்.
(மேற்கண்டவற்றை வறுப்பதற்கு எண்ணெய் சேர்க்க தேவையில்லை வெறும் வாணலியில் வறுக்கவும்.)
செய்முறை
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பொடி இட்லி செய்ய ஆறிய இட்லிகளை பயன்படுத்தவும் அல்லது சூடான இட்லியை ஆறவைத்து பயன்படுத்தவும்.
ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் அதனுடன் இட்லிகளை சேர்த்து கலக்கவும்.