பொதுவாக அவல் வைத்து கார உணவுகள் செய்வோம். குறிப்பாக போகா செய்வோம். ஆனால் இங்கு அவல் வைத்து இனிப்பு உணவு செய்வது குறித்துப் பார்ப்போம். ஆயுத பூஜை நாளில் படையலில் அவல் வைத்து வழிபடுவோம். அந்த வகையில் மீதம் உள்ள அவலில் வாழைப்பழம் சர்க்கரை சேர்த்து சத்தான புட்டிங் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள்
சிவப்பு அவல் - 1 கப்
நாட்டுச் சர்க்கரை - தேவைக்கேற்ப
தேங்காய் துருவல் - கால் கப்
செவ்வாழைப்பழம் - 2
செய்முறை
சிவப்பு அவலை நன்றாக கழுவி எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் ஊற வைக்கவும். குழைய ஊற வைத்து விடக் கூடாது. இப்போது ஊறிய அவலில் தண்ணீர் பிழிந்து எடுத்து விட்டு ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் நாட்டுச் சர்க்கரை, தேங்காய் துருவல், செவ்வாழைப் பழம் போட்டு பிசையவும். அவ்வளவு தான் சிம்பிள், சத்தான ஸ்வீட் ரெடி. அப்படியே சாப்பிடலாம். இல்லை இந்த கலவையை உருண்டைகளாகப் பிடித்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“