பள்ளி மைதானத்தில் மது அருந்தியதாக காவலர் மீது குற்றச்சாட்டு; மறுப்பு தெரிவித்த எஸ்.பி.,

பள்ளி மைதானத்தில் மது அருந்தியதாக காவலர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் எஸ்.பி., மறுப்பு தெரிவித்துள்ளார்.

பள்ளி மைதானத்தில் மது அருந்தியதாக காவலர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் எஸ்.பி., மறுப்பு தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
திருச்சி

திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் அரசு ஆதிதிராவிடர் நல ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் காவலர் மது அருந்தியதாக இந்திய மாணவர் சங்க மாநில துணை செயலாளர் தவறான தகவல் கொடுத்ததாக திருச்சி எஸ்.பி., அலுவலகத்தில் இருந்து விடுக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

Advertisment

இதுகுறித்த விபரம் வருமாறு, திருச்சி காட்டூர் ஆதிதிராவிடர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இரவு நேரத்தில் காவலர்கள் சிலர் மது அருந்துபவர்களுடன் அமர்ந்து மது அருந்தி வருவதாக, இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. 

காட்டூர் பகுதியைச் சேர்ந்த சில நபர்கள் அரசு பள்ளி மைதானத்தில் அமர்ந்து சவகாசமாக மது அருந்தி கொண்டிருந்ததாக SFI-யின் மாநில துணைச் செயலாளர் மோகன்குமார் என்பவர் திருவெறும்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

உடனடியாக திருவெறும்பூர் காவல் நிலைய போலீஸார் மேற்படி பள்ளி மைதானத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு நான்கு நபர்கள் இருந்துள்ளனர். அதில் இருவர் மது அருந்தியும், மற்ற இரு நபர்கள் மது அருந்தாமலும் இருந்துள்ளனர்.

Advertisment
Advertisements

அதில் ஒருவர் மணிகண்டம் காவல் நிலைய முதல்நிலை காவலர் (2038)இளையராஜா என்பவர் கள விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேற்படி காவலர் அப்பகுதியைச் சேர்ந்தவர் என்பதனாலும், மேற்படி நபர்கள் அவரது நண்பர்கள் என்ற வகையில் தற்செயலாக அப்பகுதிக்கு சென்று அவர்களுடன் பேசிக்கொண்டிருந்ததாகவும், தான் மது அருந்தவில்லை என்றும் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பள்ளி மைதானத்தில் இருந்த காவலர் உள்பட நான்கு நபர்களை திருவெறும்பூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து மூச்சு பகுப்பாய்வு சோதனை செய்தபோது காட்டூர் பாரிநகர் பகுதியை சேர்ந்த கார் ஓட்டுநர் மகேஸ்வரன், வடக்கு காட்டூர் பாரதிதாசன்நகர், 6-வது தெருவைச்சேர்ந்த ரயில்வே ஊழியரான பிரபு ஆகிய இருவரும் மது அருந்தி இருந்ததாகவும், வடக்கு காட்டூர் பகுதியைச்சேர்ந்த வினோத் மற்றும் மணிகண்டம் காவல் நிலைய முதல்நிலை காவலர் இளையராஜா ஆகிய இருவரும் மது அருந்தியதற்கான எந்தவித முகாந்திரமும் இல்லை என போலீஸாரின் சோதனையில் தெரிய வந்தள்ளது.

மது அருந்தியிருந்த மகேஸ்வரன் மற்றும் பிரபு ஆகிய இருவர்கள் மீது மட்டும் பொது இடத்தில் மது அருந்தியதற்காக 164/25 u/s 4(1)(c) TNP Act, dt: 31.03.25 -இன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்து காவல் நிலைய பிணையில் விடப்பட்டனர்.

விசாரணையின்போது குறிப்பிடப்பட்ட SFI கட்சி உறுப்பினர் மணிகண்டம் காவல் நிலைய காவலர் இளையராஜா பள்ளி மைதானத்தில் மது அருந்திகொண்டிருந்தாக தவறான தகவலை அளித்துள்ளதாகவும், அவருக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை என்றும், காவல் துறையின் பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற உள் நோக்கத்தில் இதுபோன்ற தவறான செய்திகளை SFI கட்சி உறுப்பினர் சமூக ஊடகங்களில் பரப்பியதாகவும் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இருப்பினும் காவலர் இளையராஜா இரவு நேரத்தில் பள்ளி வளாகத்தில் மது அருந்திய நபர்களுடன் பேசிக்கொண்ருந்த காரணத்தினால் அவரை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரெத்தினம் திருச்சி மாவட்ட ஆயுதப்படைக்கு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து திருச்சி எஸ் பி அலுவலகத்தில் இருந்து விடுக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது; திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட காட்டூர் ஆதிதிராவிடர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் காட்டூர் பகுதியைச் சேர்ந்த சில நபர்கள் மது அருந்தி கொண்டிருந்ததாக இந்திய மாணவர் சங்க மாநில துணைச் செயலாளர் மோகன்குமார் என்பவர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு உடனடியாக. திருவெறும்பூர்  போலீஸார்  பள்ளி மைதானத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு நான்கு நபர்கள் இருந்துள்ளனர். அதில் இருவர் மது அருந்தியும், மற்ற இரு நபர்கள் மது அருந்தாமலும் இருந்துள்ளனர். அதில் ஒருவர் மணிகண்டம் காவல் நிலைய முதல்நிலை காவலர் 2038. இளையராஜா என தெரிய வந்துள்ளது.

மேலும் இளையராஜா அப்பகுதியைச் சேர்ந்தவர் என்பதனாலும், மேற்படி நபர்கள் அவரது நண்பர்கள் என்ற வகையில் தற்செயலாக அப்பகுதிக்கு சென்றப்போது அவர்களுடன் பேசிக்கொண்டிருந்துள்ளார் என போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது.

இருப்பினும், மேற்படி நான்கு நபர்களை (காவலர் உட்பட) காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து மூச்சு பகுப்பாய்வு சோதனை செய்தபோது காட்டூர் பரி நகரை சேர்ந்த தங்கராஜ் மகன் மகேஸ்வரன் (42 ) இவர் கார் டிரைவராக வேலைப்பார்த்து வருகிறார்.

வடக்கு காட்டூர் பாரதிதாசன் நகர் 6வது தெருவை சேர்ந்த ராஜு மகன்  பிரபு (41) இவர் ரயில்வே ஊழியராக உள்ளார் இவர்கள் இருவரும் மது அருந்தி இருந்ததாகவும், வடக்கு காட்டூர் பெரியார் நகரை சேர்ந்த தர்மலிங்கம் மகன் வினோத் (41) இவர் கார் டிரைவராக வேலைப்பாத்து வருகிறார், மணிகண்டம் காவல் நிலைய முதல்நிலை காவலர் இளையராஜா ஆகிய இருவரும் மது அருந்தியதற்கான எந்தவித முகாந்திரமும் இல்லை என தெரிய வந்தள்ளது. 

மது அருந்தியிருந்த மேற்படி மகேஸ்வரன் மற்றும் பிரபு ஆகிய இருவர்கள் மீது மட்டும் பொது இடத்தில் மது அருந்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்து ஜாமினில் விடுவிக்கப்பட்டதாகவும், மேலும், விசாரணையின்போது. மோகன்குமார் இளையராஜா பள்ளி மைதானத்தில் மது அருந்திகொண்டிருந்தாக தவறான தகவலை அளித்துள்ளதாகவும், அவருக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை என்றும், காவல் துறையின் பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற உள் நோக்கத்தில் இதுபோன்ற தவறான செய்திகளை சமூக ஊடகங்களில் பரப்பியதாக தெரியவந்தது.

இருப்பினும், காவலர் இளையராஜா இரவு நேரத்தில் பள்ளி வளாகத்தில் மது அருந்திய நபர்களுடன் பேசிக்கொண்ருந்த காரணத்தினால் அவரை திருச்சி சரக டிஐஜி  டாக்டர் வீ.வருண்குமார் உத்திரவின் பேரில் திருச்சி எஸ் பி செ.செல்வநாகரெத்தினம் இளையராஜவை திருச்சி சரக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார் என திருச்சி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் இருந்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

க.சண்முகவடிவேல்

Trichy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: