மருத்துவக் கல்லூரிக்கு அளிக்கப்பட்ட மூதாட்டி உடல்.
தமிழ்நாடு தனித்துவமானது என்பதை அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகள் உணர்த்தி கொண்டே இருக்கின்றன. அதனடிப்படையில் முற்போக்கு சிந்தனைகள் விளைந்த இந்த மண்ணில் திராவிட உணர்வு ஊன்றி நிலைத்து நிற்கின்றன.
Advertisment
மூட நம்பிக்கை சார்ந்த விஷயங்கள் இன்றி சிலநிகழ்ச்சிகள் நடக்கின்றன. பொள்ளாச்சி அருகேயுள்ள காளியப்ப கவுண்டன் புதூரை சேர்ந்தவர் கா.சு.நாகராசன். இவர் தமிழ்நாடு திராவிட இயக்க தமிழர் பேரவையின் மாநில அமைப்பு செயலாளராக இருந்து வருகிறார். இவரின் தாயார் காவேரியம்மாள் (82). பெரியார் இயக்க தீவிர தொண்டரான இவர், வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார்.
காவேரியம்மாள்
இது குறித்து தகவல் அறிந்து அனைத்து கட்சியினரும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து காளியப்ப கவுண்டன் புதூரில் உள்ள அவரது இல்லத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
Advertisment
Advertisements
இறுதியில் தந்தை பெரியாரின் கொள்கைப்படி சடங்குகள் மறுத்து அஞ்சலி செலுத்தி இறந்த மூதாட்டியின் உடலை குடும்ப பெண்கள் மட்டும் சுமந்து ஊர்வலமாக சென்று கோவை அரசு மருத்துவ கல்லூரி நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர். இதற்கு முன் இவரது கணவர் சுப்பிரமணியத்தின் உடலும் கோவை அரசு மருத்துவ கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சிக்காக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதில் திமுக தலைமை நிலைய நிர்வாகி பொள்ளாச்சி உமாபதி, அரசு வழக்கறிஞர் விஜயராகவன், ஆதித்தமிழர் பேரவை கோபால், மக்கள் விடுதலை முன்னணி தலைவர் மாரிமுத்து, தந்தை பெரியார் திராவிடர் கழக நிர்வாகி யாழ் வெள்ளியங்கிரி, திராவிடர் கழக நிர்வாகி சிற்றரசு உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“