மாதுளம் பழத்தில் இரும்பு, பாஸ்பரஸ், தியாமின், நியாசின், ரிபோபிளேவின் மற்றும் வைட்டமின் ஏ, சி சத்துக்கள் நிறைந்துள்ளது. இப்பழத்தை உண்பதால் எலும்புகள், பற்கள் உறுதிப்படும். புதிய ரத்தம் உண்டாகும். உடல் வலுப்பெறும்.
Advertisment
இப்படி மாதுளம் பழத்தில் ஏராளமான சத்துகள் இருந்தாலும் பலரும் அதை சாப்பிட விரும்புவதில்லை. அதற்கு காரணம் அதன் தோல் தான். மாதுளம் பழத்தின் தோலை உரித்து, ஒவ்வொரு முத்துகளாக எடுத்து சாப்பிடுவதற்குள் பலருக்கு எரிச்சலை வந்துவிடும். இன்னும் சிலர் யாராவது மாதுளம் பழம் தோலை உரித்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும் யோசிப்பார்கள்.
நீங்களும் இதில் ஒருவரா? அப்படியானால் கீழே உள்ள வீடியோ உங்களுத்தான். மாதுளம் பழம் தோலை உரிக்க சிறந்த வழி எனும் ஒரு வீடியோ யூடியூபில் வைரல் ஆகியுள்ளது. இது பாகிஸ்தான் நாட்டின் கராச்சியில் எடுக்கப்பட்டது.
அதில் சாலையோரத்தில் மாதுளம் பழ ஜூஸ் கடை வைத்திருக்கும் ஒருவர் சில நிமிடங்களில் பல மாதுளம் பழங்களை அசால்ட்டாக தோல் உரித்து முத்துகளை வெளியே எடுத்தார்.
Advertisment
Advertisements
நீங்களும் இனி எளிதாக மாதுளம் பழத்தை உரிக்கலாம். அதற்கு உங்களுக்கு தேவை ஒரு கத்தி, ஒரு சப்பாத்தி கட்டை. முதலில் அந்த வீடியோவில் காட்டியபடி மாதுளம் பழத்தின் காம்பு பகுதியை வெட்டி எடுக்கவும். பிறகு, பழத்தை சுற்றி நீளவாக்கில் கீறி விடவும். இப்போது அதை விரித்தால் தாமரைப்பூவை போல இருக்கும். முத்துகள் இருக்கும் பகுதியை கீழே இருக்குமாறு பிடித்து, மாதுளம் பழத் தோலில் தட்டிக் கொடுக்கவும். என்ன ஒரு ஆச்சரியம். பழத்தில் உள்ள அனைத்து முத்துகளும் எந்த சிரமமும் இல்லாமல் தட்டில் வந்து விழும்.
இனி இந்த குறிப்பை பயன்படுத்தி மாதுளம் பழத்தோலை உரியுங்கள்
மாதுளை தோல் பயன்கள்
மாதுளை தோல் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது, தொண்டை புண் மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் தருகிறது. மாதுளை தோலை அரைத்து, வெதுவெதுப்பான நீரில் கலக்கவும். இந்த நீரைக் கொண்டு வாய் கொப்பளிக்க’ தொண்டை வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
மேலும், இந்த தோலைக் கொண்டு உங்கள் சருமத்தை ஈரப்பதமாக்கவும் முடியும். இந்த தோலின் உட்புறத்தை’ உங்கள் தோலில் மெதுவாக தேய்த்து 10-15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவி, மாற்றத்தைப் பாருங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “