மாதுளம் பழத்தில் மருத்துவ குணங்கள் அதிகமாக உள்ளன
மாதுளை மற்றும் தூதுவளை வளர்த்த வீட்டில் வயிற்றிலும் நெஞ்சிலும் கலங்கமில்லை என்பது பழமொழி. மாதுளம் பழத்தில் அயன், பாஸ்பரஸ், தியாமின், நியாசின், ரிபோபிளேவின் மற்றும் வைட்டமின் ஏ, சி சத்துக்கள் நிறைந்துள்ளது.
மாதுளைப் பழத்தை போல அதன் தோலிலும் பல சத்துகள் உள்ளன. காய்ந்த மாதுளைத்தோல், உப்பு, மிளகு சேர்த்துப் பொடி செய்து பல் துலக்கினால் பல்லில் ஏற்படும் ரத்தக்கசிவு நீங்கி, ஈறு பலமடையும்.
மாதுளை தோல்
மாதுளை ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது, தொண்டை புண் மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் தருகிறது. மாதுளை தோலை அரைத்து, வெதுவெதுப்பான நீரில் பயன்படுத்தவும். இந்த நீரைக் கொண்டு வாய் கொப்பளிக்க’ தொண்டை வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
மேலும், இந்த தோலைக் கொண்டு உங்கள் சருமத்தை ஈரப்பதமாக்கவும் முடியும்.
இந்த தோலின் உட்புறத்தை’ உங்கள் தோலில் மெதுவாக தேய்த்து 10-15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவி, மாற்றத்தைப் பாருங்கள்.
தக்காளி தோல்
தக்காளி தோல்கள் ஜீரணிக்க முடியாதவை என்று பல்வேறு ஆய்வுகள் நிரூபித்துள்ளன. இருப்பினும், இந்த தக்காளி தோல்கள் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் நம்பமுடியாத ஆதாரம். அவற்றைப் பயன்படுத்துவதற்கான சிறந்த வழி, தோலை வெயிலில் காயவைத்து, உலர வைக்க வேண்டும்.
பின்னர் நசுக்கி நன்றாக தூள் தயாரிக்க வேண்டும். இந்த தக்காளி தோல் தூளை பல்வேறு உணவுகளில் தாளிக்க பயன்படுத்தலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“