மாதுளம் பழத்தில் மருத்துவ குணங்கள் அதிகமாக உள்ளன.
மாதுளை மற்றும் தூதுவளை வளர்த்த வீட்டில் வயிற்றிலும் நெஞ்சிலும் கலங்கமில்லை என்பது பழமொழி. மாதுளம் பழத்தில் அயன், பாஸ்பரஸ், தியாமின், நியாசின், ரிபோபிளேவின் மற்றும் வைட்டமின் ஏ, சி சத்துக்கள் நிறைந்துள்ளது.
மாதுளைப் பழத்தை போல அதன் தோலிலும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாலிஃபினால்கள் உள்ளது. இவை சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்குகிறது. ஈரப்பதம் ஆக்குகிறது. புறஊதா கதிர்கள் ஏற்படுத்தும் சேதத்தில் இருந்து மாதுளை பழத்தோல் காக்கிறது. இது வயதாகும் அறிகுறிகளை தாமதப்படுத்துகிறது.
மாதுளம் பழத்தோலின் உட்புறத்தை உங்கள் தோலில் மெதுவாக தேய்த்து 10-15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவி, மாற்றத்தைப் பாருங்கள்.
மாதுளம் பழ தோல் ஸ்கரப் இறந்த செல்களை நீங்க உதவதோடு, முகத்தை ஜொலிக்க வைக்கிறது
எப்படி பயன்படுத்துவது?
மாதுளம் பழத் தோலை நிழலில் உலர வைத்து பொடியாக அரைக்கவும்.
ஒரு கிண்ணத்தில் மாதுளை தோல் பொடி இரண்டு ஸ்பூன், ஒரு ஸ்பூன் பிரவுன் சுகர், ஒரு ஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் அவகோடா எண்ணெய் அல்லது உங்களுக்குப் பிடித்த ஏதேனும் ஒரு எண்ணெயை சேர்த்து நன்கு கலக்கவும்.
இந்த பேஸ்டை உங்கள் முகம், கழுத்து முழுவதும் நன்றாக தேய்த்து மசாஜ் செய்யவும். சிறிது நேரம் கழித்து தண்ணீரில் கழுவினால் மென்மையான மிருதுவான சருமத்தை உணர்வீர்கள். ஸ்க்ரப்பிங் செய்த பிறகு மாய்ஸ்சரைசர் பயன்படுத்த மறக்காதீர்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“