புதுச்சேரியில் வசித்து வரும் தெருக்கூத்து கலைஞர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக, உதவித்தொகை வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுச்சேரியில் ஸ்ரீ முத்துமாரியம்மன் தெருக்கூத்து நாடக சபா இயங்கி வருகிறது. இதில் உள்ள கலைஞர்கள் புதுச்சேரி அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அதன்படி, தமிழகத்தை போன்று புதுச்சேரியிலும் கலைஞர்களின் இறுதி சடங்கிற்கு ரூ. 20,000 வழங்க வேண்டும் எனவும், மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ. 4,000 வழங்க வேண்டும் எனவும், தெருக்கூத்து கலைஞர்களுக்கு கலை பண்பாட்டு துறையின் மூலமாக நலவாரிய அடையாள அட்டை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கலைஞர்களின் நாடக சபைக்கு தேவையான உபகரணங்களை மானிய விலையில் வழங்க வேண்டும், தெருக்கூத்து கலைஞர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் புதுச்சேரி முதலமைச்சர் மற்றும் கலை பண்பாட்டு துறை அமைச்சர் ஆகியோருக்கு கலைஞர்கள் சார்பாக விடுக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“