பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி
மீனவர்களும், நெசவாளர்களும் ஆங்காங்கே பரவலாக குடியிருந்த பகுதி தான் புதுச்சேரி. பின்னர் ரோம் சாம் ராஜ்யத்திடம் தொடர்பு கொண்ட சுறுசுறுப்பான துறைமுக வியாபார தலமாக வளர்ந்தது. பழம்பெரும் ரோமானிய மற்றும் கிரேக்க புவியியல் அறிஞர்களால் இந்த இடம் 'பொதுக்கே' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மிகப்பழமையான காலத்தில் இருந்தே மறைகள் கற்பிக்கப்படும் தலமாகவும் இது விளங்கியதால் 'வேதபுரி' என்றும் அழைக்கப்பட்டு வந்தது. சோழர் காலத்தில் இது துறைமுக பட்டினமாக செழித்தோங்கி 'புதுச்சேரி' என அறியப்படலாயிற்று. பின்னர் அன்னிய ஆதிக்கத்தின் சுறுசுறுப்பான வியாபார தலமாக மாறியது.
1689-ல் பிரெஞ்சுக்காரர்கள் இங்கு தமது வியாபார துறைமுகத்தையும், கோட்டையையும் அமைத்தபின் அவர்கள் இந்த இடத்தை 'பாண்டிச்சேரி' என்று அழைக்க தொடங்கினர். தற்போது ஆயி மண்டபம் உள்ள இடத்தின் அருகேதான் அவர்களுடைய கோட்டை இருந்தது. அவர்கள் தமது வியாபாரத்தையும், இருப்பிடங்களையும் மேலும் பெருக்கியதும் பழமையான புதுச்சேரி
நகராட்சி கட்டிடம் புதுச்சேரியில் 1880-ம் ஆண்டில் நகராட்சிமுறை ஏற்பட்டது.
மேயர் தலைமை பொறுப்பாளர், பொதுசுகாதாரம், மக்கள் பிறப்பு, இறப்பு, திருமணம் ஆகியவற்றுக்கான பதிவு, கட்டிட தொழில் நுணுக்கம், ஆட்சிமன்ற வரிவசூல் ஆகிய பிரிவுகளாக இது இயங்கியது. நகரை தூய்மைப்படுத்தவும், ஆக்க வேலைகளில் ஈடுபடவும் உருவான இந்த அமைப்புக்கான கட்டிடம் கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டது. இதற்காக 1870-ம் ஆண்டு ஜூலை மாதம் 16-ந்தேதி அடிக்கல் நாட்டப்பட்டது.
முதல் நகராட்சி தேர்தல் 1880-ம் ஆண்டு மே மாதம் 30-ந்தேதி நடைபெற்றது. இக்கட்டிடத்தின் மாடி புதுவை ராஜ்ய அசம்பிளி மண்டபமாக (சட்டசபை) பயன்பட்டது. அழகும், சிறந்த ஓவியங்களும் நிறைந்த மாளிகை இது. பதிவு திருமணத்திற்கும், வரவேற்பு விழாக்களுக்கும் மாடிப்பகுதி அளிக்கப்பட்டு வந்தது. பல தலைவர்கள், பிரமுகர்கள், கவர்னர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் வந்து போன சிறப்பினை பெற்றது இம்மண்டபம்.
இந்த நகராட்சி கட்டிடம் கடந்த சில வரு டங்களுக்கு முன்பு பெய்த மழையால் இடிந்து விழுந்தது. தற்போது நகராட்சி கட்டிடம் புதுப் பிக்கப்பட்டு பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. இந்தியர் வசித்துவந்த பகுதியையும் உள்ளடக்கி முழு நகரையும் சுற்றி கோட்டை
எழுப்பட்பட்டது. 1750-வது வருடத்திய தெருக்களின் அமைப்பு அநேகமாக இன்று உள்ளதுபோலவே இருந்தது.
இதுவரை இப்படிப்பட்ட முறையான தெருக்களின் அமைப்பு பிரெஞ்சு கோட்டை நகரங்களை கலையில் ஒத்தது என்றே எண்ணப்பட்டு வந்தது. ஆனால், லாசாரமானளின்படி 1694-லேயே இந்த இடத்தை வசப்படுத்தி இருந்த டச்சுக்காரர்களால் இத்தகைய நகர அமைப்பு திட்டமிடப்பட் டது என்று தெரியவருகிறது.
1761-ல் புதுச்சேரியை முற்றுகையிட்டு வென்ற ஆங்கிலேயர்களால் இந்த நகரம் அழிக்கப்பட்டாலும், 1765-ல் மீண்டும் பிரெஞ்சு வசம் திரும்பியதும், இடிந்த பழைய கட்டிட அடித்தளங்களின் மேலேயே வேகமாக புதிய கட்டிடங்கள் அமைக்கப்படலாயின. நகரின் இடையே உள்ள பெரிய வாய்க்கால் 1788-ல் கட்டி முடிக்கப்பட்டது. அது ஒரு வடிகாலாக விளங்கியதுடன் பிரெஞ்சு மற்றும் தமிழ்ப்பகுதிகளை தனித்தனியே பிரிக்கும் வகையிலும் அமைந்தது.
ஆனால் இப்போது பிரெஞ்சு பகுதியின் பெரும்பாலான பகுதிகளை தமிழ் மக்கள் பிடித்துவிட்டனர். சதுரங்க பாணியில் திட்டமிடப்பட்டு நீள்வட்ட அமைப்பில் காணப்படும் இந்த கோட்டை நகரம், பெரிய வாய்க்காலால் பிரிக்கப்பட்ட தமிழ் மற்றும் பிரெஞ்சு பகுதிகளை கொண்டுள்ளது. நகரின் தமிழ்ப் பகுதி இந்து, கிறிஸ்தவ, முகமதிய பகுதிகளை உடையதாக காணப்படுகிறது.
பிரெஞ்சு பகுதியில் உள்ள கட்டிடங்கள் பாரீஸ் நகர உயர்- நடுத்தர மக்களின் பாரம்பரிய வீடுகள் போல அமைந்துள்ளன. தமிழ்ப்பகுதியில் உள்ள கட்டிடங்களோ, தமிழ்நாட்டு கலாச்சார அமைப்பினை வெளிப்படுத்தும் விதமாக உள்ளன. அடுத்தடுத்துள்ள இத்தகைய இரு வேறுபட்ட பாணிகள் ஒன்றையொன்று பாதித்ததன் விளைவாக, இங்குள்ள கட்டிடங்கள் இரண்டு கலையம்சங்களையும் பிரதிபலிக்கும் விதமாக கலப்பு கலாசார வடிவமான புதுச்சேரி பாணியை கொண்டு விளங்குகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“