ஒரு முறை இப்படி பூண்டு சட்னி செய்யுங்க. செம்ம சுவையா இருக்கும்.
தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய்- 2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய்- 7
காஷ்மீர் மிளகாய்-4
பூண்டு- 150கிராம்
பெரிய தக்காளி 1
தாளிக்க
நல்லெண்ணெய்- 2 ஸ்பூன்
கடகு- அரை ஸ்பூன்
உளுத்தம் பருப்பு- 1 ஸ்பூன்
கறிவேப்பிலை- சிறிதளவு
முதலில் அடுப்பில் கடாய் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காய்ந்த மிளகாய், காஷ்மீர் மிளகாய் சேர்த்து வதக்கி எடுக்க வேண்டும். சிவப்பு நிறத்திலேயே வறுத்து எடுக்கவும். வறுபட்டவுடன் தனியாக எடுத்து வைக்கவும்.
இப்போது அதே எண்ணெய்யில் 150கிராம் பூண்டு சேர்த்து மிதமான தீயில் வைத்து வதக்கவும். பொன்னிறமாக வதக்கவும். அடுத்து அதில் தக்காளி சேர்க்கவும். தக்காளியில் தண்ணீர் இல்லாமல் நன்கு வதக்க வேண்டும். அப்போது தான் 4 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். இது தான் இந்த ரெசிபியின் ரகசியம். தண்ணீர் இல்லாமல் நன்கு வதக்க வேண்டும். வதக்கி எடுத்தப்பின் கலவையை ஆற வைக்கவும்.
அடுத்து மிக்ஸி ஜார் எடுத்து அதில் வதக்கி வைத்த மிளகாய் சேர்த்து 1 சுற்று அரைக்கவும். தண்ணீர் சேர்க்க கூடாது. அடுத்து பூண்டு, தக்காளி கலவையை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்கவும். சட்னி பதத்திற்கு அரைக்கவும்.
இப்போது மீண்டும் கடாய் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி, கடகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து அரைத்த சட்னியை இதில் சேர்த்து தாளிக்கவும். 2 நிமிடம் எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். அவ்வளவு தான். சுவையான பூண்டு சட்னி ரெடி.