புதுச்சேரியில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை கட்டாயம் வைக்க வேண்டும் - முதலமைச்சர் ரங்கசாமி

அரசு அழைப்பிதழ்களில் தமிழ் கட்டாயம் இடம்பெற வேண்டும் என எம்எல்ஏ நேரு பேசியதையடுத்து புதுவை முதலமைச்சர் ரங்கசாமி அதிரடியாக சட்டமன்றத்தில் உத்தரவை பிறப்பித்தார்.

அரசு அழைப்பிதழ்களில் தமிழ் கட்டாயம் இடம்பெற வேண்டும் என எம்எல்ஏ நேரு பேசியதையடுத்து புதுவை முதலமைச்சர் ரங்கசாமி அதிரடியாக சட்டமன்றத்தில் உத்தரவை பிறப்பித்தார்.

author-image
WebDesk
New Update
pondy

அரசு அழைப்பிதழ்களில் தமிழ் கட்டாயம் இடம்பெற வேண்டும் என எம்எல்ஏ நேரு பேசியதையடுத்து புதுச்சேரியில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை கட்டாயம் வைக்க வேண்டும் என  புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அதிரடியாக சட்டமன்றத்தில் உத்தரவை பிறப்பித்தார்.

Advertisment

சட்டப்பேரவையில் இன்று எம்.எல்.ஏ நேரு(எ)குப்புசாமி பேசியது, தாய்மொழியான தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக புதுச்சேரி, காரைக்காலில் செயல்படும் வணிக நிறுவனங்களில் உள்ள பெயர் பலகைகள் மற்றும் விளம்பர பலகைகள் தமிழ் எழுத்துகளின் வாசகங்கள் முதல் வரிசையில் இடம்பெற செய்ய வேண்டும். அதற்கடுத்து தான் பிறமொழி வாசகங்கள் இடம்பெற செய்ய வேண்டும்.

அதேபோல புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பத்தாம் வகுப்பை கட்டாயமாக்கபட வேண்டும் என்று அரசு உத்தரவிடுமா என்று கேள்வி எழுப்பி இருந்தேன்.

இதற்கு, வணிக நிறுவனங்களில் உள்ள பெயர்பலகைளில் தமிழ் வாசகங்கள் இடம்பெறுவது பற்றி சம்பந்தமில்லாத ஒரு பதிலை துறை அதிகாரிகள் அளித்திருக்கிறார்கள்.

Advertisment
Advertisements

அதாவது 2017ஆம் ஆண்டு சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இருப்பதால், பெயர் பலகைகள் அல்லது விளம்பர பலகைகளில் முதல் வரிசையில் தமிழ் மொழியை கட்டாயமாக்க GST சட்டத்தில் விதி எதுவும் இல்லை என்று எதையும் புரிந்து கொள்ள முடியாதபடி ஒரு பதிலை வழங்கியிருக்கிறார்கள்.

GST என்பது வரி சம்பந்தமான ஒரு சட்டம். அந்த சட்டத்திற்கும் தமிழுக்கும் வித்தியாசம் தெரியாமல் இந்த பதிலை கூறியிருப்பதாக தெரிகிறது. GST என்பது எல்லா மாநிலத்திற்கும் பொருந்துவது. அதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் மொழி என்பது அவரவர்கள் மண் மற்றும் மாநிலம் சார்ந்தது.

அந்தந்த மாநிலங்களில் அவர்கள் சார்ந்த தாய்மொழி எழுத்துகளில் தான் வாசகங்கள் வணிக நிறுவனங்களிலும், பொது இடங்களிலும், இடம்பெற வேண்டும் என்று மாநில அரசுகள் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

உதாரணத்திற்கு, இதுகுறித்து அண்டை மாநிலமான தமிழ்நாடு நகராட்சி நிர்வாக இயக்குநர் அவர்கள் மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனத்தின் பெயர், முதலில் தமிழில் தான் இடம்பெற வேண்டும். ஆங்கிலம் பயன்படுத்த கருதினால், அந்த பெயர் பலகையிலேயே. இரண்டாவதாக இடம்பெறச் செய்ய வேண்டும். இதுதவிர, பிறமொழிகளை பயன்படுத்தும் போது, தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளுக்கான அளவு. முறையே 5:3:2 என்ற விகித அளவில் அமைய வேண்டும்.

ஏற்கனவே கடைகளில் வைக்கப்படும் பெயர் பலகையில், தமிழ் மொழி பெரிய அளவிலும், ஆங்கிலம் மொழி சிறிய அளவிலும் இருத்தல் வேண்டும் என்ற விதிமுறை நடைமுறையில் உள்ளது. இந்த விதியை பெரும்பாலான கடைகள் பின்பற்றுவதில்லை.

எனவே, விதிமுறை பின்பற்றாத கடையின் உரிமையாளர்களை எச்சரித்து, அவர்களுக்கு காலக்கெடு அளிப்பதுடன் நடைமுறையை பின்பற்ற நோட்டீஸ் வழங்க வேண்டும். புதிய விதிமுறையை பின்பற்றாத கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து. முறையாக ஆய்வு நடத்துவதும் அவசியம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் ஒருபடி மேலே உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தி இருக்கிறார்கள். எந்த மாநிலமாக இருந்தாலும் அந்த மாநில மொழி தெரியாதவர்கள் அரசு பணியில் சேர கூடாது என்று உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஜெயச்சந்திரன் மற்றும் பூர்ணிமா கூறியிருக்கிறார்கள்.

ஒரு வழக்கில் அவர்கள் அறிவுறுத்திய சிலவற்றை மட்டும் இங்கே கூறிகொள்கிறேன். அதாவது தமிழகத்தில் அரசு பணியில் சேர்வதற்கு தமிழ் பேச, எழுத தெரிந்திருக்க வேண்டும்.

அதேநேரத்தில் இது தமிழகத்திற்கு மட்டுமல்ல எந்த மாநிலத்திலும் அரசு பணியில் இருப்பவர்கள் அந்தந்த மாநில மொழியை தெரிந்திருக்க வேண்டும். தெரியாவிட்டால் குறிப்பிட்ட கால அளவிற்குள் மாநில அரசு சார்பில் நடத்தப்படும் மொழி தேர்வில் வெற்றிபெற வேண்டும்.

ஒரு மாநிலத்தின் அலுவல் மொழி தெரியாமல் அரசு பணிக்கு ஆசைப்படுத்துவது ஏன்? என்று அறிவித்து இருக்கிறார்கள்.

அப்படியிருக்க நம் மாநிலத்தில் உள்ள அதிகாரிகள் தாய்மொழி சம்பந்தமான என் கேள்விக்கு இப்படி பதில் கூறியிருப்பது அபத்தமாக இருக்கிறது. இதை மாண்புமிகு முதல்வர் அவர்கள் கவனத்தில் கொண்டு இதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.

புதுச்சேரி மாநிலமானது, புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்கள் கொண்ட பகுதிகளாக இருக்கிறது. இந்த நான்கு பகுதிகளையும் சேர்த்து 30 சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்றுள்ளது.

அதில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 28 தொகுதிகளும், மாஹே ஏனாம்-ல் தலா 1 தொகுதி வீதம் உள்ளது. இதில் மாஹே பிராந்தியத்தில் மலையாளமும், ஏனாம் பிராந்தியத்தில் தெலுங்கும் தாய்மொழியாக கொண்டு மக்கள் வாழ்கிறார்கள். புதுச்சேரி, காரைக்காலில் வாழும் மக்கள் தமிழை தாய்மொழியாக கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.

பாரதியார், பாரதிதாசன் போன்ற தமிழ் கவிஞர்கள் மற்றும் பெரும்புலவர்கள் வாழ்ந்த இந்த மண்ணில் தமிழுக்கான முக்கியத்துவம் குறைந்து கொண்டு வருவதுடன் பிற மொழிகளின் ஆதிக்கம் வளர்ந்து வருகிறது. இதனால் தமிழ் எழுத, படிக்க தெரிந்தவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.

நம் மாநிலத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் அண்ணிய மொழிகளான பிறமொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களே தவிர தாய்மொழியான தமிழை மாணவர்களுக்கு கற்று கொடுக்க தவறி வருகிறார்கள். இதனால் தமிழை தாய்மொழியாக கொண்ட மாணவர்கள் தமிழை எழுத, படிக்க தெரியாதவர்களாக மாறி கொண்டிருக்கிறார்கள். இதனால் இளைய சமுதாயத்தினரின் எதிர்காலம் பாதிக்கப்படும்.

மற்றும் அடையாளத்தை வடிவமைக்க உதவுகிறது. அதேபோல மரபுகள் மற்றும் பாரம்பரியத்தின் ஆழமான தொடர்பை ஏற்படுத்த உதவுகிறது. இந்த உலகில் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பேசப்படும் மொழியாக நம் தாய்மொழி தமிழ் இருந்து வருகிறது.

இதன் மதிப்பு குறையாமல் பாதுகாக்க நாம் ஒவ்வொருவரும் உறுதி ஏற்க வேண்டும். ஆகையால் மாஹே, ஏனாம் பிராந்தியங்களை தவிர நம் பிள்ளைகளுக்கு தமிழை கட்டாயம் எழுத, படிக்க கற்று தர வேண்டும். அதேபோல ஒவ்வொரு கல்வி நிறுவனமும் மாணவர்களுக்கு கட்டாயம் தமிழை போதிக்க முன்வர வேண்டும்.

6ஆம் வகுப்பு முதல் மாணவர்கள் பிற மொழி பாடங்களை விருப்பமொழி பாடமாக எடுத்து படிக்கிறார்கள் என்று தெரிகிறது. இருந்தாலும் 10ஆம் வகுப்பு வரை தமிழை பள்ளிகளில் கட்டாய பாடமாக நடத்த வேண்டும். இதை அரசும் கல்வித்துறையும் கட்டாயப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tamil Pondicherry

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: