உலகம் முழுக்க இருக்கும் தமிழர்களால் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. பொங்கல் விழா அறுவடைத் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் அறுவடை திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது. இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் குறிப்பாக வட மாநிலங்களில் மகர சங்கராந்தி என்றும் கொண்டாடப்படுகிறது.
தமிழகத்தில் மட்டுமில்லாமல் குறிப்பாக, தெலங்கானா, ஆந்திரா மாநிலங்களிலும், இலங்கை, மொரீஷியஸ், தென் ஆப்பிரிக்கா, சிங்கப்பூர், மலேசியா போன்ற தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகளிலும் இந்த பொங்கல் விழா உலகளாவிய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.
பொங்கல் திருநாளில் அனைவரும் வாசலில் பொங்கல் வைத்து சூரியனுக்கு படைப்பது என்பது மரபாக இருந்து வருகிறது. பொங்கல் பண்டிகை தை மாதத்தின் முதல் நாளாக வருவதால் தைத்திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது.
பொங்கல் பண்டிகை தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக கொண்டாடப்பட்டு வருவதாகவும் தரவுகள் கூறுகின்றன.
பொங்கல் விழா நான்கு நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. மார்கழி மாத கடைசி நாள் போகிப்பண்டிகையும், தை முதல் நாள் பொங்கல் என்றும் இரண்டாவது நாள் மாட்டுப் பொங்கல் என்றும் மூன்றவதும் நாள் காணும் பொங்கல் என்றும் மொத்தம் நான்கு நாள் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.
போகிப்பண்டிகை 2020 ஜனவரி 14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று பழையன கழிதல், புதியன புகுதல் என்ற மரபின்படி அனுசரிக்கப்படுகிறது. ஜனவரி 15-ம் தேதி பொங்கல் பண்டிகை அன்று அதிகாலை கிராமங்களில் அதிகாலையில் சூரிய வீடு அமைத்து வழிபடுவார்கள். அனைவரும் புத்தாடை அணிந்து வாசலில் பொங்கல் வைத்து சூரியனுக்கு படைப்பார்கள். 16-ம் தேதி மாட்டுப் பொங்கல் அன்று வீடுகளில் உள்ள கால்நடைகளுக்கு அலங்காரம் செய்து கோயில்களுக்கு அழைத்து சென்று வருவார்கள். 17-ம் தேதி காணும் பொங்கல் அன்று அனைவரும் குடும்பத்துடன் கோயில்களுக்கு வழிபடுவார்கள்.
பொங்கல் பண்டிகையின் போது, பொங்கல் மட்டுமில்லாமல் விதவிதமான உணவுப் பொருள்கள் சமைப்பதும் வழக்கமாக இருந்துவருகிறது.
அவியல்
அவியல் என்பது பருவகால காய்கறிகளை தயிர் மற்றும் தேங்காய் பாலுடன் கலந்து ஒரு காய்கறி கறியை வேகவைத்து செய்வது ஆகும்.
மெது வடை
எண்ணெயில் பொரித்த உளுந்து மாவுதான் மெதுவடை. இந்த மெதுவடை தென்னிந்தியாவில் பலரின் விருப்பமான ஒன்றாக உள்ளது.
இனிப்பு பொங்கல்
பொங்கல் உணவு இல்லாமல் பொங்கல் கொண்டாட்டங்கள் இல்லாமல் முழுமையடையாது. அரிசி மற்றும் பயறு வகைகளை தேங்காய் பாலில் சமைத்து உலர் பழங்களால் அலங்கரிக்கப்பட்ட பொங்கல் சாப்பிடுவதற்கு இனிமையாக இருக்கும்.