Pongal 2020 timings: உலகெங்கும் உள்ள தமிழர்கள் கொண்டாடும் விழா பொங்கல் பண்டிகை. உழவர்கள் அறுவடைக் காலத்தின் தொடக்கத்தில் சூரியனை வழிபடும் விழாவாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அத்தகைய பெருமைமிகு பொங்கல் வைக்க நாளை எப்போது நல்ல நேரம் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
கவிஞர், சமூக ஆர்வலர், வழக்கறிஞர், சிறந்த திரைக்கதையாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தனது திறமையை நிரூபித்த கைய்பி ஆஸ்மியின் 101வது பிறந்தநாளையொட்டி,…
அறுவடையின் தொடக்க விழா என்பதால், பொங்கள் பண்டிகை நல்ல நாளாகவும் செழிப்பை தரும் ஒரு பண்டிகையாகவும் இது கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகை என்று கொண்டாடப் படுகிற அதே நாளில் இந்தியாவின் பிற பகுதிகளில் குறிப்பாக வட இந்தியாவில், மகர சங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.
ரஜினி – கமலின் கலவையே தனுஷ் – தெறிக்கும் பட்டாஸ்…
பொங்கல் பண்டிகை முதல் நாள் போகி பண்டிகை என்றும், தை முதல் நாள் பொங்கல் பண்டிகை என்றும் இரண்டாவது நாள் மாட்டுப் பொங்கல் என்றும் மூன்றாவது நாள் காணும் பொங்கல் என்றும் கொண்டாடப்படுகிறது.
இன்று தமிழகம் முழுவதும் போகிப் பண்டிகை கொண்டாடப்பட்டது. தை பொங்கல் என்றும் மக்கள் வழக்கில் பெரும் பொங்கல் என்றும் கொண்டாடப்படும் பொங்கல் நாளை ஜனவரி 15 ஆம் தேதியும், மாட்டு பொங்கல் ஜனவரி 16 ஆம் தேதியும் காணும் பொங்கல் ஜனவரி 17 ஆம் தேதியும் கொண்டாடப்பட உள்ளது.
போகி பண்டிகை
பொங்கல் பண்டிகைக்கு முன்பு வரும் போகி பண்டிகை நாளான இன்று மழையின் கடவுளான இந்திரனுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. இது மார்காழி (மார்கசிர்ஷா) மாதத்தின் கடைசி நாளில் கொண்டாடப்படுகிறது.
இன்று அதிகாலை மக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்து பழைய பொருட்களை விடுத்து புதிய பொருட்களை கைக்கொள்கின்றனர். அதனால், பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற வழக்கு மக்கள் மத்தியில் நிலவுகிறது.
பொங்கல் பண்டிகை நாளில், மக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்து மீண்டும் வண்ணம் தீட்டிய பிறகு, மக்கள் தங்கள் வாசல்களில் அழகிய கோலமிட்டு முற்றத்தையும் அலங்கரிக்கின்றனர். மேலும் விவசாயிகள், விவசாயக் கருவிகளை சுத்தம் செய்து வைக்கின்றனர். மேலும், அவர்கள், இனிவரும் பருவங்களில் நல்ல விளைச்சல் விளைய வேண்டும் என்று கடவுளை பிரார்த்தனை செய்கிறார்கள்.
தை பொங்கல்
தை பொங்கல் பண்டிகையானது வளத்தையும் செழிப்பைக் குறிக்கிறது. இந்த நாளில், மக்கள் அதிகாலையில் எழுந்து, குளித்து, புதிய ஆடைகளை அணிந்துகொண்டு. தங்கள் வீடுகளில் சூரிய வீடு அமைத்து, சூரியனை வழிபடுகின்றனர். சூரியன் இல்லாமல் பூமியில் உயிர்கள் இல்லை என்பதால் சூரிய பகவானுக்கு முக்கியத்துவம் அளித்து வழிபடுகின்றனர்.
பின்னர், தங்கள் வீட்டு வாசலில் பொங்கல் அடுப்பு திறந்து அதில் மரபாக புதிய மண்பாணையில் பொங்கல் வைக்கிறார்கள். பொங்கல் பாணைக்கு மஞ்சல் குங்குமப் பொட்டு வைத்து, பின்னர், பொங்கல் பாணையைச் சுற்றி மக்கள் மஞ்சள் செடியைக் கட்டி பொங்கலிடுகின்றனர்.
பொங்கல் பாணையில் அரிசி சாதம் பொங்கி வரும்போது வீட்டில் உள்ள அனைவரும் பொங்கலோ பொங்கல் என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். பொங்கல் நன்னாளில் புதுப்பாணையில் பொங்கல் பொங்குவது மகிழ்ச்சியையும் செழிப்பையும் குறிப்பதாக உள்ளது.
இந்த ஆண்டு நாளை ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் வைக்க நல்ல நேரம் – காலை 9.15 முதல் 10.15 வரை. அதனால், இந்த நேரத்தை தவறவிடாமல் அனைவரும் நல்ல நேரத்தில் பொங்கலிடுங்கள்.
மாட்டுப் பொங்கல்
தை பொங்கல் அல்லது பெரும் பொங்கல் நாளுக்கு மறுநாள் விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளை மரியாதை செய்யும் வகையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள மாடுகளையும் கால்நடைகளையும் குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி, சலங்கை கட்டி, மாலைகளால் அலங்கரித்து மஞ்சள் மற்றும் கும்குமத்தை அதன் நெற்றியில் திலகமிட்டு கொண்டாடுகின்றனர். மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை ஆதரிப்பதற்காக விலங்குகளுக்கு மரியாதை செலுத்துகிறார்கள். இந்த நாளில், மக்கள் சிறிய பாணையில் பொங்கலிடுகின்றனர்.
காணும் பொங்கல்
மூன்றாவது நாள் காணும் பொங்கல் நாளில் அதிகாலையில், தை பொங்கல் நாளில் வீட்டு வாசலில் திறந்த பொங்கல் அடுப்பை மூடிவிட்டு. கற்பூரம் ஏற்றி வணங்குகின்றனர். பின்னர், மக்கள் குடும்பத்துடன் அருகிலுள்ள கோயிலுக்கு சென்று வழிபடுகின்றனர். இதுதான் பொதுமக்களின் பொங்கல் பண்டிகை கொண்டாட்டமாக காலம்காலமாக வழக்கத்தில் இருந்துவருகிறது.