New Update
/indian-express-tamil/media/media_files/2025/01/13/fXSxMmrg5MeV2j9WF8yi.jpg)
தமிழர் மரபில் பொங்கல் பண்டிகை என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்தது. விவசாயத்தை போற்றும் வகையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. எனினும், விவசாயிகள் மட்டுமின்றி பலதரப்பட்ட மக்களும் இதனை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்த ஆண்டில் ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. வெறும் கொண்டாட்டம் என்பதை கடந்து விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் நன்னாளாக பொங்கல் கருதப்படுவதால், மற்ற பண்டிகைகளில் இருந்து இது தனித்து தெரிகிறது.
முன்னர் ஒரு காலத்தில் பண்டிகைகளின் போது வாழ்த்து அட்டைகளை நமக்கு பிடித்தமானவர்களுக்கு அனுப்பி மகிழ்வோம். தற்போது தொழில்நுட்பத்தின் உதவியால் வண்ண வாழ்த்து அட்டைகளை வாட்ஸ் ஆப்களில் அனுப்புகிறோம். அந்த வகையில் நீங்கள் பகிர்ந்து மகிழ்வதற்காகவே சிறப்பான வாழ்த்து அட்டைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
நல்லது நடந்தேற சூரியன்
அவன் ஒளி கற்றை
உம் வாழ்வில் வீச வேண்டும்
இனிய பொங்கல் வாழ்த்துகள்
இனிய பொங்கல் நாளில்
மகிழ்ச்சியும் மன அமைதியும்
பெருகட்டும் ஆரோக்கியமும்
செல்வமும் பொங்கட்டும்
எங்கும் சாந்தி நிலவட்டும்
பொங்கல் வாழ்த்துகள்
பிழைப்புக்காக திசைகள் எட்டும்
சென்ற பந்தங்கள் ஓர்நாளில்
ஒன்றுகூடி மகிழும் திருநாள்
தைத்திருநாள் நல்வாழ்த்துகள்
இந்த நன்னாளில் பொங்கும்
பொங்கல் உங்கள் வாழ்வில்
பல வெற்றிகளை பெற்று
மகிழ்ச்சியுடன் வாழ எனது
மனமார்ந்த வாழ்த்துகள்
பொங்கல் திருநாள் பொலிவாய்ப் புலர்ந்திட
பொங்கட்டும் இன்பம் புவியோர் திளைத்திட
இங்கவர் வாழ்வு இனிதாய் வளம்பெற
தங்கத் தமிழ்கொண்டு வாழ்த்துகிறோம்
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
பொங்கலோடு வளமும்
நலமும் செல்வமும்
மகிழ்ச்சியும் பொங்கிட
நல்வாழ்த்துகள்
விடிகின்ற பொழுது எங்கும்
கரும்பாய் இனிக்கட்டும்
இந்த தைத்திருநாள் முதல்
இனிய பொங்கல் மற்றும்
உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.