New Update
/indian-express-tamil/media/media_files/2025/01/13/PuXPUmaVaGhm7b5CalSY.jpg)
தமிழ் மக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் பிரதான இடம் வகிப்பது பொங்கல் திருநாள். நாள்தோறும் பாடுபட்டு உழைக்கும் உழவர்களுக்கும், உழவுக்கு பெரிதும் உதவி செய்யும் சூரிய பகவானுக்கும், மாடுகளுக்கும் நன்றி தெரிவிப்பதற்காகவே பண்டிகையை உருவாக்கி அதனை விமரிசையாக கொண்டாடுபவர்கள் தமிழர்கள்.
பொங்கல் தினம் நெருங்கி வரும் நேரத்தில் வீடு முழுவதும் சுத்தம் செய்து, தேவையில்லாத பொருட்களை அப்புறப்படுத்தி, அனைத்து ஏற்பாடுகளையும் பொதுமக்கள் தொடங்கி விடுவார்கள். பொங்கலுக்கு 10 நாட்களுக்கு முன்பே திருவிழாவிற்கான கொண்டாட்ட மனநிலைக்கு பெரும்பாலான மக்கள் சென்று விடுவார்கள். சென்னை போன்ற பெருநகரங்களை விட கிராமப்புறங்களில் பொங்கலின் கொண்டாட்டம் வெகு விமர்சியாக இருக்கும்.
இதேபோல், இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களில் பல விதமான பெயர்களில் பொங்கலை மக்கள் கொண்டாடுகின்றனர். இந்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. வெளியூர்களில் தங்கி படிக்கும் மாணவர்கள், வேலை பார்ப்பவர்கள் என எல்லோரும் தங்கள் சொந்த ஊர்களில் உற்றார், உறனவிர்கள், நண்பர்களுடன் பொங்கல் நன்னாளை கொண்டாட வேண்டும் என விரும்புவார்கள்.
எனினும், காண முடியாத வகையில் வெகு தூரத்தில் இருக்கும் தங்கள் மனதிற்கு நெருக்கமானவர்களுக்கு செல்போன் மூலமாக வாழ்த்துகளை பரிமாறுவார்கள். அந்த வகையில் நீங்கள் பகிர்ந்து மகிழ்வதற்கு ஏற்ப பிரத்தியேகமான வாழ்த்து செய்திகளை இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.
பொங்கல் வாழ்த்துகள்:
தித்திக்கும் கரும்பை போல
உங்கள் வாழ்வு மகிழ்ச்சியில்
இனிக்கட்டும் இனிய
தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்
அறுவடைத் திருநாள்
பொங்கல் நன்னாளில்
தமிழர்கள் வாழ்வில்
அன்பும் அமைதியும்
நலமும் வளமும் பெருகட்டும்
இந்த தைத்திருநாளில் நாம் உண்ண
உணவளிக்கும் இயற்கை அன்னைக்கும்
உழவர்களுக்கும் வாழ்த்துகள்
சூரிய பொங்கல் வாழ்த்துகள்
பொங்கலை போல உங்கள்
வாழ்வில் மகிழ்ச்சியும்
செல்வமும் பொங்க வாழ்த்துகள்
அன்பு பொங்க, ஆசைகள் பொங்க
இன்பம் பொங்க, இனிமை பொங்க
என்றும் மகிழ்ச்சி பொங்க
பொங்கலோ பொங்கல் வாழ்த்துகள்
இல்லத்தில் இன்பம் சூழ
உள்ளத்தில் உற்சாகம் பொங்க
வாழ்க்கையில் வளங்கள் வளர
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
அன்பும் ஆனந்தமும் பொங்கிட
அறமும் வளமும் தழைத்திட
இல்லமும் உள்ளமும் பொங்க
இனிய தமிழர் திருநாளாம்
பொங்கல் நல்வாழ்த்துகள்
இனியவை உங்கள் கரங்களில்
சேரட்டும் இனிதொரு நாளிலிருந்து
இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்
கரும்பாய் மகிழ்ச்சி இல்லத்தில்
நிலைக்க என் இதயம் கனிந்த
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.