கோவை மாவட்டம், காரமடை பகுதியில் 'நாங்களும் இருக்கிறோம்' சமூக அமைப்பு சார்பில் ஆனந்தம் முதியோர் காப்பகத்தில் பொங்கல் விழா நடைபெற்றது.
/indian-express-tamil/media/media_files/2025/01/14/y4yoIWgFut6LFrQIirOY.jpg)
ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை தினத்தின் போது ஆதரவற்ற மக்களை சந்தித்து அவர்களுடன் கொண்டாடுவதை இந்த அமைப்பு வழக்கமாக கொண்டுள்ளது. அதனடிப்படையில், இந்த ஆண்டில் உறவினர்களால் கைவிடப்பட்ட முதியோர்கள் பராமரிக்கப்படும் இல்லத்திற்கு வருகை தந்து பொங்கல் கொண்டாடினர்.
/indian-express-tamil/media/media_files/2025/01/14/g597BO0R7sOCScDevXga.jpg)
இதனால், காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் முதியோர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். விழாவின் போது அனைவரும் ஆடிப்பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
/indian-express-tamil/media/media_files/2025/01/14/7Z0HwSEYLAgUJu3yY6JL.jpg)
நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருடன் இணைந்து பண்டிகைகளை கொண்டாடும் சூழலில், இவ்வாறு ஆதரவற்றவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக பொங்கல் கொண்டாடிய சமூக அமைப்புக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
செய்தி - பி.ரஹ்மான்