Pongal Festival Date and Time: தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை இதோ நெருங்கி வந்துவிட்டது, தைப் பொங்கல் எப்போது வைக்க வேண்டும், எந்த நேரத்தில் பொங்கல் வைக்க வேண்டும், பொங்கல் வைப்பதன் சிறப்பு, முக்கியத்துவம் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
பொங்கல் பண்டிகை நெருங்கி வந்துவிட்டது. இன்னும் ஓரிரு நாட்களில் பொங்கலைக் கொண்டாட மக்கள் தயாராகி வருகிறார்கள். தமிழ்நாட்டில், அனைவராலும் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை, தை முதல் நாளில் வருவதால், தைப் பொங்கல் என்றும், பெரும் பொங்கல் என்றும் சூரியப் பொங்கல் என்றும் அறுவடைத் திருநாள் கொண்டாடுகிறார்கள். தெற்கே பொங்கல் பண்டிகை என கொண்டாடுகிறார்கள், என்றால் வட மாநிலங்களில், மகர சங்கராந்தி என்று கொண்டாடுகிறார்கள்.
பொங்கல் பண்டிகை நாளில் அதிகாலையில் இருந்து சூரிய வீடு அமைத்து வரவேற்பார்கள். பிறகு, பொங்கல் அடுப்பு திறந்து புதுப் பாணை வைத்து, பொங்கலிடுவார்கள்.
நீங்கள் பொங்கல் வைக்க தயாராகிவிட்டீர்கள் என்றால், முகூர்த்த நேரத்தில் பொங்கல் வைப்பது நல்லது. அதனால், பொங்கல் வைத்து வழிபட மூகூர்த்த நேரம், சிறப்புகள் குறித்து இங்கே தெரிந்துகொள்வோம்.
இந்த ஆண்டு ஜனவரி 15-ம் தேதி திங்கள்கிழமை தைப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கல் வைப்பதற்கான முகூர்த்த நேரம், காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை பொங்கல் வைக்கலாம். இந்த நேரத்தை விட்டீர்கள் என்றால் அடுத்து, காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை வைத்து வழிபடலாம். பொங்கல் வைப்பதற்கான நல்ல நேரம் இதுதான்.
அதே போல, திங்கள்கிழமை காலை 7.30 மணி முதல் 9 மணி வரை ராகு காலமாக இருப்பதால் இந்த நேரத்தில் பொங்கல் வைக்கக் கூடாது.
பொங்கல் வைத்து வழிபடுவதற்கான மூர்த்த நேரத்தை நாட்டுப்புற பாடகி அனிதா குப்புசாமி தனது யூடியூப் சேனலில் கூறியுள்ளார். அதில், பொங்கல் வைக்கும் நேரம் நல்ல நேரமாக இருக்க வேண்டும் என்பதால், மூர்த்த நேரத்தில், அதாவது 9.30 முதல் 10.30 மணி வரை உகந்த நேரமாக இருக்கும். ஏனென்றால், ராகு காலம் கடந்துவிட்ட பிறகு பொங்கல் வைக்கப்படுவதால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். நல்ல நேரத்தில் பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு படையலிட்டு, பொங்கலோ பொங்கல் என்று கொன்டாடுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“