pongal-festival | coimbatore | கோவை பீளமேடு பகுதியில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனமான சர்தார் வல்லபாய் படேல் ஜவுளி தொழில்நுட்ப கல்லூரியில் மாணவ- மாணவியர் பொங்கல் விழா கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை பீளமேடு பகுதியில் மத்திய ஐவுளி துறையால் நடத்தப்படும் சர்தார் வல்லபாய் படேல் ஜவுளி தொழில்நுட்ப கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இதில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று கல்லூரி வளாகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் கல்லூரி மாணவ- மாணவியர் பாரம்பரிய உடையுடன் பங்கேற்றனர்.
கோவை: கல்லூரி பொங்கல் விழா -- வீடியோ பி. ரஹ்மான் #Pongal2024 | #SardarvallabhaiPatelCollege | #Coimbatore
Posted by IETamil on Thursday, January 4, 2024
மாணவர்கள் வேட்டி, சட்டையுடனும், மாணவிகள் சேலை அணிந்தும் கல்லூரிக்கு வந்திருந்தனர். மேள தாளங்கள் முழங்க, பேராசிரியர்களும், மாணவர்களும் பொங்கல் வைத்து பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.
மேலும் இசைக்கு ஏற்றபடி மாணவ- மாணவியர் நடனமாடி உற்சாகமாக பொங்கல் விழாவை கொண்டாடினர். கல்லூரி வளாகத்தில் கோலப்போட்டிகள் நடத்தப்பட்டன.
அத்துடன், பொங்கல் பொங்கும் போது குலவை ஓலி எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். உரி அடித்தல், ஜமாப் இசை, கயிறு இழுத்தல் போன்ற நிகழ்வுகளும் நடத்தப்பட்டன.
செய்தியாளர் பி ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“