/indian-express-tamil/media/media_files/2025/01/13/WcgZ91p3yOhSnQCqCYVI.jpg)
இந்த ஆண்டு பொங்கல் கோலம்
2025 பொங்கல் ஆரம்பித்து விட்டது. அவ்வளவு தான் நம்ம வீட்டு வாசலை அழகாக்க கோலம் தேடி விட்டீர்களா? மிக பெரிய குழப்பம் வேண்டாம். இதோ சட்டென்று இந்த கோலத்தை ட்ரை பண்ணுங்கள். பக்கத்து வீட்டுக்காரர்கள் கூட எப்படி இந்த கோலம் போட்டீர்கள் என்று கேட்பார்கள். இன்றைய போகியை சிறப்பாக்க ஒரு டிசைனர் பானை கோலம். எப்படி போடுவது என்று பார்ப்போமா?
இந்த கோலம் போடுவதற்கு இடுக்குப்புள்ளி முறையை பயன்படுத்தலாம். 7க்கு 4 என்ற கணக்கில் புள்ளி வைத்து வர வேண்டும். 7X4 என்ற கணக்கில் புள்ளி இருக்க வேண்டும்.
முதலில் வெள்ளை கோல மாவால் புள்ளி வைத்து வரைய ஆரம்பிக்க வேண்டும். பானை, மயில், வளைவுகள் என அனைத்தையும் ஒருசேர வரையவும்.
பின்னர் பானை மற்றும் மயிலுக்கு கலர் பொடிகளால் வண்ணம் தீட்டவும். படங்களுக்கு வண்ணங்கள் தீட்டியதும் வெள்ளை கோலமாவால் ஓரங்களில் பார்டர் மீண்டும் வரைவது கோலத்திற்கு அழகு சேர்க்கும்.
ஒரு வார்த்தைல சொல்லனும்னா Excellent!! Madurai Style EMPTY BIRYANI |Chef Deena's Kitchen
பின்னர் கோலத்தை மேலும் அழகாக்க தோகைகளில் கலர் பொடிகளால் படத்தில் கொடுக்கப்பட்டது போல வளைவுகள் மற்றும் பூக்கள் வரையலாம். கோலம் எடுப்பாக தெரியும்.
அவ்வளவு தான் இந்த போகியை அழகாக்க உங்கள் வீட்டில் போட வேண்டிய கோலம். இந்த கோலத்தை போட்டு உங்கள் தை திருநாளை சிறப்பாக்குங்கள். அனைவருக்கும் இனிய தை பொங்கல் திருநாள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.