pongal kolam pongal kolam desgin : பொங்கலுக்கு உங்களுக்கு நிறைய நிறைய வேலை இருக்கும் என்று எங்களுக்கு நன்றாகவே தெரியும். பெண்கள் பொங்கல் அன்று காலையில் எழுந்து தங்கள் வீட்டு வாசலில் மிகப்பெரிய கோலம் போட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். ஆனால் என்ன கோலம் போட என்பது தான் அவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனையாகவே இருக்கும். என்ன செய்வது என்று உங்களுக்கு குழப்பம் இருந்தால் கவலைய விடுங்க. இந்த பொங்கல் கோலங்களில் உங்களுக்கு எது பிடிச்சுருக்கோ அதை தேர்வு செஞ்சு எடுத்து உங்கள் வீட்டு வாசலில் பெரிய கோலம் போடுங்க.
பொங்கல் அன்று பொங்கல் கோலங்கள் மட்டுமே போடவேண்டும் என்பதில்லை. மாறாக மயில் கோலமும், அழகான ரங்கோலிகளும் போட்டு வாசலை அழகுப்படுத்தலாம்.
வாசலின் நடுவில் மட்டும் போடப்படும் கோலங்கள் ஒரு அழகு என்றால், திண்ணைகளில் போடப்படும் கோலங்கள் அதன் பார்டர்கள் எல்லாம் தனி அழகு தான். பொதுவாக பச்சரிசியை அரைத்து துணியில் தொட்டு போடப்படும் கோலங்கள் இரண்டு மூன்று நாட்களுக்கு வாசலில் தாங்கும் என்பதால் பலரும் அதனை விரும்புவார்கள்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook
Web Title:Pongal kolam pongal kolam desgin 2021 pongal rangoli designs 2021