Advertisment

பொங்கல் ஸ்பெஷல்... இது இல்லனா எப்படி? பல காய்கறி குழம்பு!

பொங்கல் ஸ்பெஷல் பல காய்கறி குழம்பு இப்படி செய்யுங்க.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
pongal sambar recipe sambar recipes

pongal sambar recipe sambar recipes

Pongal sambar recipe, sambar recipes: பொங்கல் ஸ்பெஷல் பல காய்கறி குழம்பு இப்படி செய்யுங்க. நாம் நமது வீடுகளில் பல வகையான காய்கறி பயன்படுத்தி, விதவிதமான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு.

Advertisment

புளியுடன் 4 கப் நீர் சேர்த்துக் கரைக்கவும். மேலே குறிப்பிட்டுள்ள காய்கறிகளை அதன்படி நறுக்கி தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

3 மேசைக்கரண்டி எண்ணெயில் முறையே பெருங்காயம், கடலைப் பருப்பு, தனியா, மிளகாய் வற்றல், தேங்காய் முதலியவற்றை தனித் தனியே சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

வறுத்தவற்றை ஆற வைத்து மிக்ஸியில் பொடியாக்கவும்.

காய்கறித்துண்டுகளை நீர் சேர்த்து நசுங்கும் பதத்திற்கு வேக வைத்து வடிகட்டவும்.

புளிக்கரைசலைக் கொதிக்கவிட்டு சற்று புளிவாசனை போனதும் பாதி வெந்த காய்கறிகள், தேவையான உப்பு சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.

நன்கு கொதித்து சேர்ந்து கொண்டதும், அதில் பொடி செய்த கலவை, வெந்த துவரம்பருப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

10 நிமிடம் கொதித்ததும் இறக்கி, ஒரு மேசைக்கரண்டி எண்ணெயில் கடுகு, வாய் கீறிய பச்சைமிளகாய் சேர்த்து தாளித்து போடவும். மேலே கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை சேர்க்கவும்.

கமகமக்கும் பொங்கல் ஸ்பெஷல் குழம்பு ரெடி. விருப்பப்பட்டால் இதில் ஒரு சிறிய துண்டு வெல்லம் சேர்க்கலாம். எல்லா காய்கறிகளும் கிடைக்காவிட்டால் இருக்கும் காய்கறிகளை வைத்தும் இந்தக் குழம்பு செய்யலாம். முருங்கை, முள்ளங்கி, வெங்காயம் இதில் சேர்ப்பதில்லை.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Food Recipes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment