பீஸ்ட் பட நடிகை பூஜா ஹெக்டே மும்பையில் பிறந்து வளர்ந்தவர் என்பது உங்களுக்குத் தெரியுமா?
பூஜா ஹெக்டே’ மாஷபிள் இந்தியா உடனான தனது சமீபத்திய நேர்காணலில், தான் பல தென்னிந்திய படங்களில் பணிபுரிந்ததால், எல்லாரும் தன்னை தென்னிந்தியாவைச் சேர்ந்தவள் என்று எப்படிக் கருதுகிறார்கள் என்பதை வெளிப்படுத்தினார். மேலும், ஹிருத்திக் ரோஷன் கூட தன்னை தென்னிந்தியாவைச் சேர்ந்தவர் என்று நினைத்ததாகக் கூறினார்.
இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்த பூஜா, “நான் மும்பையில் பிறந்து வளர்ந்தேன். நான் ஹிருத்திக்குடன் மொஹஞ்சதாரோ லுக் டெஸ்ட் செய்ததாக ஞாபகம்.
நான் இப்போது வீட்டிற்கு செல்லப் போகிறேன் என்று அவரிடம் சொன்னேன். அதற்கு அவர்- 'ஓ அப்படியா? உங்கள் விமானம் எத்தனை மணிக்கு?’ என்று கேட்டார். உடனே நான் விமானமா? என கேட்டேன். அப்போது ஹிருத்திக் ‘நீ வீட்டுக்குப் போகவில்லையா?’ என கேட்க, நான் பாந்த்ராவுக்குப் போகிறேன் என்று சொன்னதும் அவர் திகைத்துவிட்டார் என்று பூஜா கூறினார்.
மேலும் தான் ஒரு குழந்தையாக இருந்தபோது, ஹிருத்திக் ரோஷன் மீது தனக்கு எப்படி பெரிய ஈர்ப்பு இருந்தது என்பதை பூஜா ஹெக்டே வெளிப்படுத்தினார்.
ஹிருத்திக்குடன் ஒரு படம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கோய் மில் கயா பிரீமியரில் கலந்து கொண்டதை பூஜா நினைவு கூர்ந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அவர் எதிர்பார்த்தபடி விஷயங்கள் நடக்கவில்லை.
“கோய் மில் கயாவின் முதல் காட்சிக்கு நான் சென்றிருந்தேன். என் கேமராவில் ரீல் வைத்து எடுத்து சென்றேன். ஹிருத்திக் ரோஷனுடன் படம் எடுக்க ஆசைப்பட்டேன். ஆனால், அனைத்து பிரபலங்களும் செய்வது போல், அவர் 10 நிமிடங்கள் மட்டுமே வந்து, அனைவரையும் பார்த்து கை அசைத்து விட்டு சென்றார். நான் மனம் உடைந்து போனேன்.
கோயி மில் கயாவின் போஸ்டருக்குப் பக்கத்தில் நான் சோகமாக இருக்கும் புகைப்படம் உள்ளது. சில சமயங்களில் பூஜா, காலப்போக்கில் திரும்பிச் செல்ல விரும்புவதாகவும், “காத்திருங்கள், உங்கள் கதை முடிந்துவிடவில்லை. ஒரு நாள், ஹிருத்திக் ரோஷனுடன் ஒரு முழுப் படம் இருக்கும் என்று சொல்ல விரும்புவதாகவும் கூறினார்.
தொழில்ரீதியாக இப்போது, பூஜா ஹெக்டே சல்மான் கான் உடனான கபி ஈத் கபி தீபாவளி வெளியீட்டை எதிர்நோக்கி காத்திருக்கிறார். இப்படம் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் அன்று வெளியாக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“