/indian-express-tamil/media/media_files/2025/06/16/XBVi9JZb76MzApwlOZ82.jpg)
Pooja utensils Brass cleaning (Image: Adobe stock)
உங்க வீட்டில் உள்ள பித்தளை விளக்குகள் மற்றும் பூஜை சாமான்களை சுத்தம் செய்வது ஒரு பெரிய வேலையா இருக்கா? கைகள் வலிக்க தேய்த்து, பிறகு அவை சீக்கிரம் நிறம் மாறிவிடுகிறதா? கவலையை விடுங்கள்! ஒரு சூப்பரான, எளிமையான வீட்டுக்குறிப்புடன் உங்கள் பித்தளைப் பொருட்கள் தங்கத்தைப் போல ஜொலிக்க வைக்கலாம். அது எப்படி என்று பார்க்கலாமா?
தேவையான பொருட்கள்:
பாத்திரம் தேய்க்கும் சோப்பு - 2 ஸ்பூன்
கோதுமை மாவு - 1 ஸ்பூன்
தண்ணீர்
விபூதி
எலுமிச்சை
முதலில், இரண்டு ஸ்பூன் பாத்திரம் தேய்க்கும் சோப்பை துருவி எடுத்துக்கொள்ளுங்கள்.
அத்துடன் ஒரு ஸ்பூன் கோதுமை மாவை சேர்த்து நன்கு கலந்து பொடியாக்கி வைத்துக்கொள்ளுங்கள்.
இப்போது, உங்கள் வீட்டில் உள்ள பித்தளை விளக்குகள் அல்லது பூஜை பொருட்களின் மீது இந்த பொடியைத் தூவி விடுங்கள்.
பிறகு, சிறிதளவு தண்ணீர் தெளித்து, கைகளால் நன்கு தேய்த்து விடுங்கள்.
தேய்த்த பிறகு, பத்து நிமிடங்கள் அப்படியே ஊற விடுங்கள்.
பத்து நிமிடங்கள் கழித்து, சிறிது விபூதியை எடுத்து, ஒரு துண்டு எலுமிச்சையில் தொட்டு, ஊறவைத்த பித்தளைப் பொருட்களின் மேல் பூசி விடுங்கள்.
இதோட பலன் என்ன தெரியுமா?
இந்த முறையில் நீங்கள் சுத்தம் செய்த பித்தளைப் பொருட்கள், ஒரு மாதம் ஆனாலும் கருக்காது! நீங்கள் தேய்த்து வைத்தது போலவே புதிது போல் பளபளக்கும். சும்மா தங்கம் போல தகதகவென ஜொலிப்பதை நீங்களே காணலாம்.
இந்த எளிய குறிப்பை நீங்களும் முயற்சி செய்து பார்த்து, உங்கள் பித்தளைப் பாத்திரங்களை அழகாக வைத்துக்கொள்ளுங்கள்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.