பூஜைக்காக பெரும்பாலும் செம்பு, பித்தளை பாத்திரங்களை பயன்படுத்துவோம். இந்த பாத்திரங்களை சுத்தமாக கழுவுவது பெரிய வேலையாக இருக்கும். அதனை எவ்வாறு செய்வது என தற்போது காணலாம்.
முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீருடன், லெமன் சால்ட் ஒரு ஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். அதன் பின்னர், பாத்திரம் கழுவ பயன்படும் சோப் திரவம் கொஞ்சமாக சேர்க்க வேண்டும். இந்த தண்ணீரை கலக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதன் பின்னர், நாம் கழுவ வேண்டிய பாத்திரங்களை எடுத்து இந்த தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். இந்த பாத்திரங்கள் நன்றாக ஊறியதும், இவற்றை தேய்த்து கழுவலாம். அதிக அழுத்தம் கொடுத்து தேய்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லாமல், சுலபமாகவே இதனை கழுவலாம்.
இந்த முறையில் பூஜை பாத்திரங்களை கழுவுவதால் அவை சுத்தமாகவும், பளபளப்பாகவும் இருக்கும். இதன் மூலம் தேய்த்துக் கழுவ வேண்டிய சிரமமும் நமக்கு ஏற்படாது. மிக எளிமையான முறை என்பதால் நமது நேரமும் மிச்சமாகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“