அழுகிய தக்காளி போதும்… பூஜை பொருட்கள் பளிச்சென மாற இப்படி யூஸ் பண்ணுங்க!
அழுகிப் போன தக்காளியை பயன்படுத்தி நம் வீட்டில் இருக்கும் பூஜை பொருட்கள் மற்றும் பித்தளை பொருட்களை எவ்வாறு சுத்தம் செய்வது என்று இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இதனை சுலபமாக செய்ய முடியும்.
அழுகிப் போன தக்காளியை பயன்படுத்தி நம் வீட்டில் இருக்கும் பூஜை பொருட்கள் மற்றும் பித்தளை பொருட்களை எவ்வாறு சுத்தம் செய்வது என்று இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இதனை சுலபமாக செய்ய முடியும்.
ஒவ்வொரு காய்கறியிலும் நம் உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் பல்வேறு சத்துகள் நிறைந்திருக்கின்றன. ஆனால், அவை அழுகி விட்டால் குப்பையில் வீசுவோம். ஆனால், அழுகிய காய்கறியில் இருந்தும் நமக்கு சில பலன்கள் கிடக்கும். அதன்படி, அழுகிய தக்காளியை பயன்படுத்தி வீட்டில் இருக்கும் பூஜை பொருட்கள் மற்றும் பித்தளை பொருட்களை எப்படி சுத்தப்படுத்துவது என்று காணலாம்.
Advertisment
ஒரு பாத்திரத்தில் கைப்பிடி அளவிற்கு கல் உப்பு போட வேண்டும். அதில் அழுகிய தக்காளியை போட்டு, அந்த தக்காளி மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்க்க வேண்டும். இதனை ஃப்ரிட்ஜின் ஃப்ரீசர் பகுதியில் சிறிது நேரம் வைக்க வேண்டும். இப்படி செய்தால் தக்காளி இறுக்கமாகி விடும்.
இப்போது, இறுகிய தக்காளியை மிக்ஸியில் அரைத்து பசை பதத்திற்கு கொண்டு வர வேண்டும். இத்துடன் ஒரு லிட்டர் தண்ணீர் மற்றும் கால் கிளாஸ் அளவிற்கு வினிகர் ஆகியவை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இந்த தக்காளி கலவையை கொண்டு வீட்டில் இருக்கு பித்தளை பொருட்கள் மற்றும் பூஜை பொருட்களை கழுவ முடியும்.
இதற்காக கை வலிக்க தேய்த்து கழுவ வேண்டிய அவசியம் கிடையாது. அந்த வகையில், இந்த தக்காளி கலவையில் பூஜை மற்றும் பித்தளை பொருட்களை சுமார் 30 நிமிடங்களுக்கு ஊற வைக்க வேண்டும். இப்படி ஊற வைக்கும் போது அதில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் கறைகள் நீங்கி விடும்.
Advertisment
Advertisements
இறுதியாக இந்த பொருட்களை வெளியே எடுத்து சாதாரணமாக நாம் பாத்திரங்களுக்கு பயன்படுத்தும் சோப்பு போட்டு கழுவி விடலாம். இப்படி செய்தால் நம் வீட்டில் பூஜை பொருட்கள் அனைத்தும் புதியது போன்று மாறி விடும்.