Advertisment

டேஸ்டியான பூண்டு குழம்பு: செட்டிநாடு ஸ்டைல் செய்முறை

Poondu Kulambu Benefits: நோய் எதிர்ப்பு சக்திக்கு இந்தப் பூண்டு குழம்பு மிக முக்கியம். பூண்டு குழம்பு செட்டி நாடு ஸ்டைலில் எப்படி செய்வது?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vendhaya Kulambu Recipe Vendhaya Kulambu in tamil

Vendhaya Kulambu Recipe Vendhaya Kulambu in tamil

Poondu Kulambu Recipe, Poondu Kulambu Tamil Video: பூண்டு தினமும் நமது சாப்பாட்டில் இடம் பெற வேண்டிய அத்தியாவசியமான ஒரு உணவுப் பொருள். அதிக மெனக்கெடல் இல்லாத, எப்போதும் நமது கிச்சனில் இருக்கும் ஒரு உணவுப் பொருளும்கூட.

Advertisment

காய்கறிகளைத் தேடாமல் சிம்பிளாக பூண்டு குழம்பு வைத்துவிட முடியும். நோய் எதிர்ப்பு சக்திக்கு இந்தப் பூண்டு குழம்பு மிக முக்கியம். பூண்டு குழம்பு செட்டி நாடு ஸ்டைலில் எப்படி செய்வது? என இங்கு பார்க்கலாம்.

Poondu Kulambu Tamil Video: பூண்டு குழம்பு

பூண்டு குழம்பு செய்யத் தேவையானப் பொருட்கள்:

பூண்டு – 30 பல்

சின்ன வெங்காயம் – 20

தக்காளி – 1

மல்லித்தூள் – 2 தேக்கரண்டி

குழம்பு மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி

மஞ்சள்தூள் – 1 /2 தேக்கரண்டி

புளி – நெல்லிக்காய் அளவு

நல்லெண்ணெய் – 1 மேசைக்கரண்டி

தாளிக்க:

கடுகு – 1 தேக்கரண்டி

சோம்பு – 1 தேக்கரண்டி

வெந்தயம் – 1 /2 தேக்கரண்டி

கறிவேப்பிலை – சிறிது

பூண்டு குழம்பு செய்முறை

* புளியை 3 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். அதில் மல்லித்தூள், குழம்புதூள், மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும்.

* வெங்காயம், பூண்டு ஆகியவற்றை நீளமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டு சிறியதாக இருந்தால் நறுக்க வேண்டியதில்லை.

* தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி, தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாகச் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், பூண்டை சேர்த்து நன்கு வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

* தக்காளி வதங்கியதும் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

* அடுப்பை குறைந்த தீயிலேயே வைத்து குழம்பு திக்காக ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விட்டு இறக்கவும்.

* சூப்பரான செட்டிநாடு பூண்டு குழம்பு ரெடி.

அத்தியாவசிய தேவையான பூண்டு குழம்பை டேஸ்டியாக செய்து மகிழுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

 

 

Food Recipes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment