poondu kuzhambu tamil, poondu kuzhambu making video: பூண்டில் ஆற்றல் மிக்க பல வகையான சல்பர் கலவைகள் உள்ளது. பூண்டில் இருந்து வரும் காரமான நாற்றத்திற்கு இதுவே காரணமாக விளங்குகிறது.
Advertisment
பாக்டீரியா எதிர்ப்பி மற்றும் நச்சுயிர் எதிர்ப்பி, இரத்த கொதிப்பை குறைத்தல், கொலஸ்ட்ராலை குறைத்தல், இதயத்தை பாதுகாத்தல், சுவாச பிரச்சனைகளுக்கான தீர்வு போன்ற பல்வேறு நன்மைகளைக் கொண்டுள்ளது.
பூண்டுக் குழம்பு எவ்வாறு வைப்பது என்பதை இங்கே காணலாம்:
poondu kuzhambu making: பூண்டு குழம்பு செய்முறை :
Advertisment
Advertisements
தேவையானப் பொருட்கள்
பூண்டு – 30 பல்
சின்ன வெங்காயம் – 20
தக்காளி – 1
மல்லித்தூள் – 2 தேக்கரண்டி
குழம்பு மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1 /2 தேக்கரண்டி
புளி – நெல்லிக்காய் அளவு
நல்லெண்ணெய் – 1 மேசைக்கரண்டி
தாளிக்க
கடுகு – 1 தேக்கரண்டி
சோம்பு – 1 தேக்கரண்டி
வெந்தயம் – 1 /2 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிது
செய்முறை :
* புளியை 3 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். அதில் மல்லித்தூள், குழம்புதூள், மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும்.
* வெங்காயம், பூண்டு ஆகியவற்றை நீளமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டு சிறியதாக இருந்தால் நறுக்க வேண்டியதில்லை.
* தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஏ.ஆர்.ரகுமான்- ஏ.ஆர்.அமீன் இணைந்த பாடல்: சுஷாந்த்-க்கு அஞ்சலி
* கடாயில் எண்ணெய் ஊற்றி, தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாகச் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், பூண்டை சேர்த்து நன்கு வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.