Poondu Milagu Sadam Tamil Video: நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய உணவுப் பொருள். சளி, இருமல் ஆகியவற்றுக்கும் மருந்து. டேஸ்டியாக இதை செய்து பயன்படுத்துங்கள்.
Poondu Milagu Sadam Tamil Video: நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய உணவுப் பொருள். சளி, இருமல் ஆகியவற்றுக்கும் மருந்து. டேஸ்டியாக இதை செய்து பயன்படுத்துங்கள்.
Poondu Milagu Sadam Recipe, Poondu Milagu Sadam Tamil Video வெறும் டேஸ்டுக்கான உணவுப் பொருள் என்றில்லாமல், உடல் நலத்திற்கான உணவுப் பொருள் என மக்கள் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த மாற்றத்தில், கொரோனா பெருந்தொற்றுக்கும் பங்கு இருக்கிறது.
Advertisment
அந்த வகையில் பூண்டு மிளகு சாதம், உணவே மருந்து வகையறாதான். ஆனால் இந்த உடல் நலத்திற்கான பூண்டு மிளகு சாதத்தை டேஸ்டியாகவும் சமைத்தால், இன்னும் சிறப்பு அல்லவா? பூண்டு மிளகு சாதம், குழந்தைகள் உள்பட அனைவருக்கும் பிடிக்கும் வகையில் செய்வது எப்படி? என இங்கு காணலாம்.
Poondu Milagu Sadam Tamil Video: பூண்டு மிளகு சாதம்
Advertisment
Advertisements
பூண்டு மிளகு சாதம் செய்யத் தேவையான பொருட்கள்: பாஸ்மதி (சாதம்) - ஒரு கப், கடுகு - அரை டீ ஸ்பூன், உளுந்து - அரை டீ ஸ்பூன், கடலை பருப்பு - அரை டீ ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, வெங்காயம் - ஒன்று, பூண்டு - 10, மிளகுத் தூள் - ஒரு டீ ஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை, நெய்,
உப்பு
பூண்டு மிளகு சாதம் செய்முறை:
பூண்டு மிளகு சாதம் செய்முறை வருமாறு: முதலில் பாஸ்மதி அரிசியை உதிரியாக வேக வைத்துக் கொள்ளவும். வெங்காயம், பூண்டு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.
வாணலியில் நெய்விட்டு உருகியதும், கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு சேர்த்து தாளிக்கவும். கூடவே, காயந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்குங்கள். பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சிவந்ததும், நறுக்கிய பூண்டு, உப்பு சேர்த்து வதக்கவும்.
பிறகு இதில் சாதம் சேர்த்து நன்றாக கிளறவும். இறுதியாக, மிளகுத்தூள், கொத்தமல்லித்தழை சேர்த்து கலந்து 2 நிமிடங்கள் கழித்து இறக்கி விடுங்கள். இப்போது சுவையான பூண்டு மிளகு சாதம் தயார்.
பூண்டு மிளகு சாதம் இந்த பெருந்தொற்று காலத்தில் நம் உடலுக்கு இம்யூனிட்டி எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய உணவுப் பொருள். சளி, இருமல் ஆகியவற்றுக்கும் மருந்து. டேஸ்டியாக இதை செய்து பயன்படுத்துங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"