poori kilangu recipe hotel style poori kilangu : பெரும்பாலும் காலை நேரச் சிற்றுண்டியாக தயாரிக்கப்படும் பூரி கிழங்கு குருமா.
Advertisment
பூரி கிழங்கு மசாலா என்றால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள். உருளை கிழங்கை கொண்டு செய்யப்படும் இந்த மசாலா பூரிக்கு ஒரு சூப்பர் சைடு டிஷ்.
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு – 1/4 கிலோ
பெரிய வெங்காயம் – 1 அல்லது 2
பழுத்த தக்காளி – 2
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
சுக்குத் தூள் -1 டீஸ்பூன்
மல்லி விதை – 1 ஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
ஓமம் – 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -1/2 ஸ்பூன்
கரம் மசாலா -1 டீஸ்பூன்
உருளைக்கிழங்குகளை வேக வைத்து, தோலுரித்து மசித்து கொள்ளவும்.கொத்தமல்லி விதை, சீரகம், ஓமம் மூன்றையும் வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்து கொள்ளவும்.வெங்காயம், தக்காளி இரண்டையும் தனித்தனியாக அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் விட்டு சீரகம், வரமிளகாய் கிள்ளிப் போட்டு தாளிக்கவும்.பிறகு அரைத்த வெங்காய விழுதை பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அதன் பின்னர் தக்காளி விழுதை சேர்த்து வேகவிடவும்.
மஞ்சள் தூள், மிளகாய் தூள், சுக்கு தூள் பொடிகளையும் சேர்த்து வதக்கவும்.மசித்த உருளைக்கிழங்கு மற்றும் உப்பு சேர்த்து பிரட்டவும்.
மசாலா கிழங்கில் பிடித்ததும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.காரம் தேவையெனில் சேர்க்கவும்.சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ளவும்.வெந்து வரும் போது கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.