இப்படி செய்தால் மொறு மொறு பூரி கிடைக்கும். அதிகம் எண்ணெய்யும் எடுத்துக்கொள்ளாது.
தேவையான பொருட்கள்
3 கப் கோதுமை மாவு
கால் கப் ரவை
தேவையான அளவு உப்பு
தண்ணீர்
பொறிக்கும் அளவு எண்ணெய்
செய்முறை: ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, ரவை, உப்பு, தண்ணீர் சேர்த்து கிளர வேண்டும். இதை நன்றாக தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும். தொடர்ந்து பூரி தேய்த்து எண்ணெய்யில் பொறித்து எடுக்கவும்.
உருளை கிழங்கு மசாலா தயார் செய்யத் தேவையான பொருட்கள்:-
உருளைக்கிழங்கு - 2
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
உலர் சிவப்பு மிளகாய் - 2
இஞ்சி - 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 4
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1
கறிவேப்பிலை
பூரி கிழங்கு மசாலா செய்முறை: முதலில் உருளைக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் வேக வைத்துக்கொள்ளவும். பின்னர் தோல்களை உரித்து மசியல் போல் பிசைந்து கொள்ளவும்.
இப்போது தனியாக ஒரு பாத்திரம் எடுத்து அவை சூடானதும் எண்ணெய் ஊற்றவும். அதில் கடுகு தூவி பொரிந்ததும் சீரகம், கடலை பருப்பு சேர்த்து சில வினாடிகள் வறுத்து கொள்ளவும். தொடர்ந்து காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்த பிறகு இஞ்சி சேர்த்து வதக்கவும்.
இஞ்சியின் பச்சை வாடை போனதும் பச்சை மிளகாய், மஞ்சள் தூள், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பிறகு ( 3 - 4 நிமிடம் போதுமானது) மசக்கி வைத்துள்ள கிழங்கை சேர்க்கவும். பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து 5 முதல் 6 நிமிடங்களுக்கு மூடி வைத்து வேக விடவும். அவை நன்கு வெந்தவுடன் அவற்றின் மேல் கருவேப்பிலை தூவி கீழே இறக்கவும்.