Poori Recipe In Tamil, Masala Poori Tamil Video: பூரி, குழந்தைகளுக்கு பிடித்தமான ஒரு உணவு. அதையே இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக அவர்களுக்கு பிடிக்கிற மாதிரி மசாலா சேர்த்து செய்து கொடுத்தால், கொண்டாட மாட்டார்களா?
Advertisment
பூரியை சற்றே காரசாரமாக மசாலா சேர்த்து மசாலா பூரியாக செய்வது எப்படி? என இங்கு பார்க்கலாம்.
Masala Poori Tamil Video: மசாலா பூரி
Advertisment
Advertisements
மசாலா பூரி செய்யத் தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை வருமாறு: ஒரு அகலமான பாத்திரத்தில் 1/2 கப் அளவு ரவை போட்டு, அதே கப்பில் 1/2 கப் அளவு சுடுதண்ணீரை ஊற்றி நன்றாக கலந்து 10 நிமிடங்கள் வரை ஊற வையுங்கள். ஊறிய ரவையில், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 1, சீரகம் – 1 ஸ்பூன், சில்லி ஃப்ளேக்ஸ் – 1 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு – 1 இவைகளை முதலில் ஒன்றாக சேர்த்து நன்றாக பிசைய வேண்டும்.
அடுத்து, இந்தக் கலவையுடன் தேவையான அளவு உப்பு, 1 கப் கோதுமை மாவு சேர்த்து பிசைய வேண்டும். தண்ணீர் எதுவும் ஊற்ற வேண்டாம். இந்த பூரி மாவு அதிக கட்டி ஆகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
பின்னர், கையில் எண்ணெய் தடவிக் கொண்டு, இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி லேசாக கோதுமை மாவை தொட்டு பூரி வடிவில் தேய்த்துக் கொள்ளுங்கள். அவற்றை எண்ணெயில் பொன்னிறமாக பொறித்து எடுங்கள். இப்போது சுவையான மசலா பூரி ரெடி.
வித்தியாசமான இந்த மசாலா பூரியை குழந்தைகள் ரொம்பவே விரும்பிச் சாப்பிடுவார்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Poori Recipe In Tamil Masala Poori Tamil Video மசாலா பூரி தமிழ் வீடியோ