பூர்ணா ஜெகநாதன் சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸில் ஹாலிவுட் நடிகை மிண்டி கலிங் ஒருங்கிணைத்த நட்சத்திரங்கள் நிறைந்த தீபாவளி விருந்தில் கலந்து கொண்டார். இந்த நிகழ்விற்காக, ஏஸ் டிசைனர் அனிதா டோங்ரேயின் ஓட் டு புஜ் சேகரிப்பில் இருந்து, ஒரு ரிலாக்ஸ்டு ஐவரி ஜாக்கெட்டை பூர்ணா அணிந்திருந்தார்.
உடல் முழுவதும் சுவாசிக்கும்படி, பட்டின் சாயலில் இருந்த அந்த ஆடை, டோரியின் மூலம் இடுப்பில் கட்டப்பட்டிருந்தது. குஜராத்தின் கட்ச் பகுதியைச் சேர்ந்த பெண் கைவினைஞர்களால் கையால் எம்ப்ராய்டரி செய்யப்பட்ட நேரன் வடிவங்கள் இந்த ஆடையில் இடம்பெற்றிருந்தன.
இந்த நந்திகா ஜாக்கெட் செட், எனது ஓட் முதல் புஜ் வரையிலான சேகரிப்பு, இந்திய ஃபேஷன் எவ்வளவு நேர்த்தியான கைவினைப்பொருளாக இருக்கிறது என்பதற்கு நம்பமுடியாத சிறப்பான உதாரணம். நேரன் எம்பிராய்டரியில் திறமையான ஒரு பெண் கைவினைஞர், வீட்டு வேலைகளை முடித்த பிறகு, ஒரு நாளைக்கு 2-3 மணி நேரம் வசதியாக அமர்ந்து எம்பிராய்டரி வேலைகளை செய்கிறார். ஒவ்வொரு ஜாக்கெட்டும் முடிக்க 75 முதல் 90 நாட்கள் ஆகும், அது உண்மையிலேயே அன்பின் உழைப்பு” என்று வடிவமைப்பாளர் இன்ஸ்டாகிராமில்-இல் பகிர்ந்துள்ளார்.
கிரேசிலா ஜெம்ஸ் நகைகள், நேர்த்தியாகக் கட்டப்பட்ட கூந்தல், ஆன்-பாயிண்ட் மேக்கப் மற்றும் அதற்குப் பொருத்தமான காலணிகள் ஆகியவற்றுடன் தனது தோற்றத்தில் பார்ப்பதற்கு முழுமையாக இருந்தார்.
இந்த தீபாவளி விருந்தில் இந்திய பிரபலங்கள் பிரியங்கா சோப்ரா, லில்லி சிங், தீபிகா முத்தியாலா மற்றும் கல் பென், குணால் நய்யார், தொழிலதிபர்கள் ராதி தேவ்லுகியா-ஷெட்டி மற்றும் தீபிகா முத்யாலா, மீனா ஹாரிஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பண்டிகை சமயங்களில், பிரகாசமான வண்ணங்களின் கடலில், பூர்ணாவின் ஆடை புதிய காற்றின் சுவாசமாக இருந்தது, பாரம்பரிய வடிவமைப்புகளை நவீன நிழற்படங்களுடன் கலந்து பொருத்துவதற்கு ஊக்கமளிக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“