ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ’பூவே பூச்சூடவா’ சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் சக்தியாக நடித்து வரும் ரேஷ்மா முரளிதரன் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். ரேஷ்மா பிறந்தது கேரளாவில், வளர்ந்தது பெங்களூருவில். சிறு வயதில் இருந்தே ஏர் ஹோஸ்டஸ் ஆக வேண்டும் என்பது விருப்பமாக இருந்துள்ளது. ஆனால் அம்மாவின் ஆசைக்காக கல்லூரி படிப்பை முடித்துள்ளார்.அதன் பிறகு மாடலிங் துறையில் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கினார்.
Advertisment
கடந்த 2015இல் சென்னையில் நடந்த பேஷன் ஷோவில் முதல் 10 இடத்திற்குள் வந்திருந்தார். அதன்பிறகு 2016 இல் நடந்த ஃபேஷன் ஷோவில் இரண்டாவது runner-up ஆகவும் வந்திருக்கிறார். பிறகு எம்.பி.ஏ படிப்பதற்காக கேரளா செல்லாம் என நினைத்தபோது கிடைத்த வாய்ப்புதான் ஜீ தமிழ் டான்ஸ் ஜோடி டான்ஸ். இந்த ஷோவில் ராகவ் உடன் இணைந்து தனது நடனத்திறமையை வெளிப்படுத்தினார். இந்த நிகழ்ச்சி தான் அவருக்கு ஒரு மைல்கல்லாக அமைந்தது.
Advertisment
Advertisements
ரேஷ்மாவின் நடிப்பின் மீது உள்ள வெறியையும் நடனத்தின் மீது அவருக்கு இருக்கிற காதலையும் இந்த நிகழ்ச்சி வெளிப்படுத்தியது.இதனைத் தொடர்ந்து தான் இவருக்கு பூவே பூச்சூடவா சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலில் இவர் சக்தியாக நடித்திருப்பார். இவருடைய துறுதுறுப்பான நடிப்பு இந்த சீரியலின் பெரிய பிளஸ். இந்த சீரியலுக்கு பிறகு இவருக்கு ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகி விட்டது. இந்த தொடரில் இவர் துணிச்சலான பெண்ணாகவும், எதையும் சிரித்த முகத்தோடு அணுகுவதும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சீரியலில் சக்தி செய்யும் நகைச்சுவையும் ரசிக்கும் படி இருக்கும். பூவே பூச்சூடவா சீரியல் 1000 எபிசோட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சீரியலுக்கு கிடைத்த ரீச்சால் புதிதாக ஒரு சீரியலில் நடிக்க ரேஷ்மா ஒப்பந்தமாகி உள்ளார்.
தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் அபி டெய்லர்ஸ் என்ற சீரியலில் நடித்து வருகிறார். அந்த சீரியலில் டெய்லராக ரேஷ்மா நடித்திருப்பதுபோல சமீபத்தில் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல கமெண்ட்ஸ்களை பெற்றது. பூவே பூச்சூடவா தொடரில் நடித்த மதன் பாண்டியனும் ரேஷ்மாவும் காதலித்து வருகின்றனர். இந்தாண்டு திருமண அறிவிப்பையும் வெளியிட உள்ளனர்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா அவ்வபோது மார்டன் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தெறிக்கவிட்டு வருகிறார். ரேஷ்மாவின் ஹாபி பென்சில் ஸ்கெட்ச் வரைவதுதான். சினிமா சான்ஸ் கிடைத்தால் பெரியத்திரையிலும் ஒரு ரவுண்ட் வருவாராம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"