Advertisment

இந்த கார் வாங்க அமைச்சர் உதவி தேவைப்பட்டது - பூவே உனக்காக அருண்!

Poove Unakaaga Arun Kumar about his Car Tamil News இந்த வண்டி மிகவும் பாதுகாப்பானதும். இவனுக்கு நான் வைத்திருக்கும் பெயர் டைட்டன்

author-image
WebDesk
Sep 21, 2021 18:05 IST
Poove Unakaaga Arun Kumar about his Car Tamil News

Poove Unakaaga Arun Kumar about his Car Tamil News

Poove Unakaaga Arun Kumar about his Car Tamil News : வாணி ராணி, சந்திரலேகா, பூவே உனக்காக உள்ளிட்ட பல சீரியல்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த, நடித்துக்கொண்டிருக்கும் அருண் குமார் ராஜாவின் பிரத்தியேக கார். அதன் உற்பத்தி குறைவாகவும், அதற்கான டிமாண்ட் மக்கள் மத்தியில் அதிகமாக இருப்பதாகவும் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.  அப்படி என்ன பிரம்மாண்ட கார் அது? அதில் என்னவெல்லாம் ஸ்பெஷாலிட்டி உள்ளது? பார்க்கலாமா?

Advertisment
publive-image

"கரடுமுரடான ரோடு, மழை, மண் என எவ்வளவு தடங்கல் வந்தாலும் அசராமல் ஓடுவான் என்னுடைய இந்த மஹிந்திரா தார். இரண்டு ஓய்வு நாள்கள் கிடைத்தாலும், வெளியூர்களுக்குச் சென்று சுற்றி பார்ப்பது வழக்கம். அதற்கேற்றபடி இந்த கார் ஈடுகொடுக்கிறது. நீண்ட தூரம் போகவேண்டும் என்றால் நிச்சயம் இந்த காரை தேர்ந்தெடுக்கலாம். அவ்வளவு எளிதில் நீங்களும் சரி காரும் சரி டயர்ட் ஆகவே மாட்டீங்க.

publive-image

இந்த வண்டி சென்ற ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி வெளியானது. இதற்கு முன்பு பழைய தார் வைத்திருந்தேன். நான் இதுபோன்ற பெரிய கார்களின் ரசிகன். முதலில் TUV வைத்திருந்தேன். பிறகு XUV, பழைய தார் அடுத்தது இந்த கார். இந்த மாடல் வெளியாகப் போகிறது என்றதுமே அதிகமான எதிர்பார்ப்பு வந்தது. அதன் புகைப்படங்கள் பார்த்ததும் மிகவும் பிடித்துவிட்டது. பார்ப்பதற்கு இந்திய மாடல் கார் போல் இல்லாமல் மிகவும் ஸ்டைலிஷாக இருந்தது.

வண்டியை லான்ச் பண்ணும்போது சென்று பார்த்தேன். அப்போதே எந்தவித சந்தேகமும் இல்லாமல் இந்த வண்டியை நிச்சயம் வாங்கவேண்டும் என்று முடிவு பண்ணினேன். அப்போதே புக் செய்ய முடிவு செய்தேன். ஆனால், கொரோனா பரவலைத் தொடர்ந்து இதன் உற்பத்தியைக் குறைத்துவிட்டனர். அதனால், புக் செய்ய 8,9 மாதங்கள் ஆகும் என்றனர். பிறகு என்னுடைய நண்பர்கள் முதல் அமைச்சர்கள் வரை பலருடைய உதவியை நாடினேன். அந்த அளவிற்கு இந்த வண்டி மீது ஆசை. இப்போது என் குடும்பத்தினரின் ஒருவனாகவே மாறிவிட்டான். நிச்சயம் இவனுடன் நான் நீண்ட நாள்கள் பயணிப்பேன்.

publive-image

எதையுமே சுத்தமாக வைத்துக்கொள்வது எனக்கு மிகவும் பிடிக்கும். அப்படிதான் இவனையும் மிகவும் சுத்தமாக வைத்திருப்பேன். போட்டிருக்கும் மேட், மூன்று லேயர் கொண்டது. இங்கிருக்கும் சின்னசின்ன பொருள்களும் மிகவும் பார்த்துப் பார்த்து வாங்கியது. இந்த வண்டி மிகவும் பாதுகாப்பானதும். இவனுக்கு நான் வைத்திருக்கும் பெயர் டைட்டன்".

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Poove Unakaga
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment