Poove Unakaaga Subhathra Beauty Tips Skincare Secrets Tamil : விஜய் டிவியின் '7C' தொடரில் அறிமுகமாகி, தமிழ் கடவுள் முருகன், தேவதை, கைராசி குடும்பம், கண்மணி, பூவே உனக்காக உள்ளிட்ட பல தொடர்களில் நடித்தவர் சுபத்திரா. துணை நடிகையாக மக்களின் மனதில் இடம் பிடித்தவர், டிக் டாக், ரீல்ஸ் போன்றவற்றிலும் மிகப் பிரபலம். மிக பிசியாக இவர், தான் பின்பற்றும் சரும பராமரிப்பு குறிப்புகளை சமீபத்தில் பகிர்ந்துகொண்டார்.
Advertisment
"நான் முழுக்க முழுக்க இயற்கைப் பொருள்களைக் கொண்டு மட்டும்தான் என்னுடைய சருமத்தைப் பாதுகாத்துக்கொள்வேன். பராமரிப்பு பொருள்களை உபயோகப்படுத்துவதற்கு முன்பு, என்றைக்குமே முகத்தில் போடப்படும் மேக்-அப்பை அகற்றாமல் தூங்கவே கூடாது. அது மிகவும் முக்கியம். சாதாரண தேங்காய் எண்ணெய் கொண்டு சுத்தம் செய்தாலே போதும்.
நான் எப்போதும் சோப் உபயோகப்படுத்த மாட்டேன். அதற்கு பதிலாக பயித்தம் மாவு, தேன், மைசூர் பருப்பு பொடி, கற்றாழை ஜெல் ஆகியவற்றைக் கலந்து முகத்தில் அப்லை செய்து, 10 நிமிடங்கள் கழித்து முகம் கழுவிவிடுவேன். இதை நான் தினமும் செய்வேன். இதற்காகவே பத்து நிமிடங்கள் தனியாக ஒதுக்கிவிடுவேன். உடலுக்கும் சோப்புக்கு பதிலாக இதைதான் உபயோகிப்பேன்.
அதேபோல நாம் சாப்பிடுகிற சாப்பாடும் ஆரோக்கியமாக இருக்கவேண்டும். அந்த வரிசையில் தினமும் காலையில் இரண்டு பெரிய நெல்லிக்காயை அரைத்து அதனோடு தேன் கலந்து ஜூஸ் செய்து குடிப்பேன். அதற்குப் பிறகு தலைமுடிக்கு நல்லது என்று ஒரு ஸ்பூன் வெந்தயப்பொடி சாப்பிடுவேன். ஒரு பூண்டு சாப்பிடுவேன். இது சருமம் மற்றும் உடலுக்கு மிகவும் நல்லது. நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
இதுபோன்று இயற்கை முறையிலேயே உங்கள் சருமத்தைப் பாதுகாக்க ஏராளமான வழிமுறைகள் உள்ளன. உங்கள் சருமத்திற்கு எது சிறந்ததாக இருக்கிறதோ, அவற்றை கவனமாகத் தேர்ந்தெடுத்துத் தொடர்ந்து செய்வது அவசியம்".
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil