Poove Unakaga Serial Actress Radhika Preethi Lifestyle Tamil News
Poove Unakaga Serial Actress Radhika Preethi Lifestyle Tamil News : 'பூவே உனக்காக' தொடர் மூலம் பல ரசிகர்களைப் பெற்றிருப்பவர் ராதிகா ப்ரீத்தி. 'யாரது?' என்று கேட்பது கேட்கிறது. இந்த மெகா தொடரில் பூவரசியாக நடித்து வருபவர்தான் ராஷிகா. ஓராண்டுக்கும் மேலாக சுட செய்தும், ஒளிபரப்ப முடியாமல் இருந்து, நீண்ட போராட்டத்திற்குப் பிறகு வெளியாகி தற்போது வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் இந்த சீரியல் ஷூட்டிங் ஸ்பாட் பற்றியும் ராதிகா ப்ரீத்தியின் சில பெர்சனல் பக்கங்களையும் இனி பார்க்கலாம்.
Advertisment
கர்நாடக மாநிலம் கேஜிஎஃப் தான் பூவராசி பிறந்து வளர்ந்த ஊர். தேசிய அளவிலான த்ரோ பால் விளையாட்டு வீரரான இவருக்கு, தன்னுடைய பத்தாம் வகுப்பின்போது திரையில் நடிகையாகவேண்டும் என்று தோன்றியதாம். அதனைத் தொடர்ந்து ஒரு வருடத்தில் கன்னட திரைப்பட வாய்ப்பு அவரைத் தேடி வந்தது. ஆசை நிறைவேறப்போகிறது என்கிற சந்தோஷத்தில் வாய்ப்பினை ஏற்றுக்கொண்டார். ஆனால், ஏதோ காரணத்தினால் திரைப்பட சுட பாதிலேயே கைவிடப்பட, சீரியல் பக்கம் திரும்பியிருக்கிறார்.
Advertisment
Advertisements
சிறு வயதிலேயே ராதிகா நடிக்க வருவதற்கு இன்னொரு காரணம், குடும்ப சூழ்நிலை. பணத்தட்டுப்பாடு ஏற்பட்டதனால், நடிக்கவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறார். என்றாலும், அதற்கான பலனை தற்போது இரண்டு மடங்காக அனுபவித்துக்கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் 'பூவரசியா? என்ன பேர் இது? இதுவரை இப்படிப்பட்ட பெயரைக் கேள்விப்பட்டதே இல்லையே!' என்றிருந்தவர், இப்போது யார் இவருடைய பெயரைக் கேட்டாலும், பூவரசி என்றுதான் சொல்கிறாராம்.
'பூவே உனக்காக' என்கிற விஜய் நடித்த படத்தின் பெயரை தன்னுடைய சீரியலில் வைத்திருப்பது ராதிகாவுக்கு அவ்வளவு சந்தோஷம். காரணம், இவர் தளபதி விஜய்யின் தீவிர ரசிகை. அதுவும் மற்றவர்களைப்போல் 'தளபதி', 'விஜய் அண்ணா', 'விஜய் சார்' என்றெல்லாம் சொல்வது இவருக்குப் பிடிக்காதாம். செல்லமாக 'விஜய் மாமா' என்று கூறுவதுதான் இவருக்குப் பிடிக்குமாம்.
பூவே உனக்காக தொடரில் ரொமான்ஸ் காட்சிகளின்போது, இரண்டு, மூன்று டேக் போய்விடக்கூடாது என்பதற்காக, இத்தொடரின் நாயகனுடன் 'ஒழுங்கா ஒரே டேக்கில் முடித்துவிடவேண்டும்' என்று முன்பே பேசிவைத்துக்கொள்வாராம் ராதிகா. அதன்படி இருவரும் நடிப்பார்களாம். அதேபோல, இதுபோன்ற காட்சிகளில், கண்களைப் பார்த்துப் பேசினால் சிரிப்பு வந்துவிடும் என்பதனால், இருவரும் காதுகளை பார்த்துத்தான் பேசுவார்களாம்! என்ன கொடுமை சார் இது!!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil