வீட்டில் பொரி இருக்கா? அப்ப டக்குனு இப்படி அல்வா செஞ்சுடுங்க

அரிசிப் பொரியில் அல்வா செய்யலாமாம், எப்படி செய்வது என்று பார்ப்போம்.

அரிசிப் பொரியில் அல்வா செய்யலாமாம், எப்படி செய்வது என்று பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
halwa

வீட்டில் இருக்கும் அரிசிப் பொரி வைத்து சிம்பிளாக அல்வா ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம். 

Advertisment

தேவையான பொருட்கள்

அரிசிப் பொரி - 3 கப் 
வெல்லம் - 3 கப் 
புட் கலர்-  சிறிதளவு 
நெய் - 4 டேபிள் ஸ்பூன் 
முந்திரி- 10 
திராட்சை - சிறிதளவு 
ஏலக்காய் பொடி - கால் டீஸ்பூன்

செய்முறை 

Advertisment
Advertisements

ஒரு பாத்திரத்தில் அரிசிப் பொரி எடுத்துக் கொள்ள வேண்டும். அது தண்ணீர் ஊற்றி 15 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும். பின்னர் பொரியை தண்ணீர் இல்லாமல் நன்றாகப் பிழிந்து எடுத்து அதனை ஒரு மிக்ஜி ஜாரில் போட்டு அரைக்க வேண்டும். 

இப்போது பாகு காய்ச்ச வேண்டும், அதற்கு அடுப்பில் கடாய் வைத்து வெல்லம் சேர்த்து கால் கப் தண்ணீரில் கரைத்து பாகு தயாரிக்க வேண்டும். அடுத்து மற்றொரு அடி கனமான பாத்திரத்தில் அரிசிப் பொரி விழுது, வெல்லப்பாகு ஆகியவற்றை போட்டு மிதமான தீயில் நன்றாக கிளற வேண்டும்.  

அவ்வப்போது நெய் சேர்க்கலாம். அடுத்து சிறிதளவு புட் கலர், ஏலக்காய் பொடி சேர்த்து தொடர்ந்து கிளற வேண்டும். அரிசிப் பொரி கலவை நன்றாகத் திரண்டு பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது அடுப்பை மிதமான தீயில் வைத்து  திராட்சை, முந்திரியை நெய்யில் பொன்னிறமாக வறுத்து எடுத்து இந்த அல்வாவில் சேர்க்கலாம். அவ்வளவு தான் சிம்பிள், சுவையான பொரி அல்வா ரெடி. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Food

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: