இம்யூனிட்டிக்கு உதவும் பூண்டு, காய்கறி, பழம்… கோவிட் தடுப்பூசிக்கு பிறகு இந்த உணவு முக்கியம்!

தடுப்பூசி எடுத்த பிறகு, சாப்பிட வேண்டிய சில உணவுகளையும் உங்களுக்காக இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாம் அலை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நிலையில், அதை எதிர்த்துப் போராடுவதற்கான தடுப்பூசி பயன்பாடு நாட்டு மக்களிடையே நிம்மதி பெரு மூச்சிக்கு வழி வகுக்கிறது. இருப்பினும், தலைவலி, காய்ச்சல், உடல் வலி, சோர்வு போன்றவை தடுப்பூசியை செலுத்திக் கொண்ட பிறகு ஏற்படுவதாக சிலர் தெரிவித்துள்ளனர். இது போன்ற பக்க விளைவுகளை
ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கங்களால் குறைக்கலாம் அல்லது முற்றிலுமாக தவிர்க்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் தடுப்பூசியின் விளைவுகளை அதிகரிக்கவும் சில உணவுகளை உங்களுக்காக பரிந்துரைக்கிறோம். அதே போல் தடுப்பூசி எடுத்த பிறகு, சாப்பிட வேண்டிய சில உணவுகளையும் உங்களுக்காக இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

வெங்காயம் மற்றும் பூண்டு :

வெங்காயம் மற்றும் பூண்டு இரண்டிலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், குடல் ஆரோக்கியத்திற்கு நல்ல மருந்தாகவும் உள்ளது. பூண்டு மற்றும் வெங்காயத்தை உணவின் ஒரு பகுதியாக சேர்த்துக் கொள்ள வேண்டும். பூண்டில் மாங்கனீசு, வைட்டமின் பி 6, நார்ச்சத்து, செலினியம், வைட்டமின் சி மற்றும் கால்சியம், தாமிரம், பொட்டாசியம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன. இது ஜலதோஷத்திற்கு சிகிச்சையளிப்பதாக பயன்படுகிறது மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்துள்ளது.

பழங்கள் :

பழங்களை சாப்பிடுவதன் மூலம் கோவிட் தடுப்பூசிகளிலிருந்து பக்க விளைவுகளைப் பெறும் அபாயத்தைக் குறைக்கலாம். சப்போட்டா, அன்னாசி, மா, வாழைப்பழம், முலாம்பழம் மற்றும் தர்பூசணி ஆகியவை உடலை நீரோட்டத்துடன் வைத்திருக்க உதவும். நோய் எதிர்ப்பு சக்தியைக் தூண்டுவதற்கும், ஆரோக்கியமான உடல் நலத்துடன் இருக்கவும் காலை உணவாக இவற்றை உட்கொள்ளலாம்.

காய்கறிகள் :

எந்தவொரு கடுமையான பக்க விளைவுகளையும் தவிர்க்க ஒரு சீரான உணவுப் பழக்கம் முக்கியமானது. பச்சை காய்கறிகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்தவைகளாக உள்ளன. அவை குடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. எனவே, தடுப்பூசிக்கு பிந்தைய உணவில் நிறைய பச்சை காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். அவற்றை பச்சையாக சாலட்களாகவோ அல்லது காய்கறி சூப்களாகவோ சாப்பிடலாம்.

மஞ்சள் :

மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்ற உலகளாவிய நற்பெயரைப் பெற்றுள்ளதை நாம் அனைவரும் அறிவோம். மஞ்சளை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மன அழுத்தத்தை குறைக்கலாம். மேலும், இது செரிமானத்திற்கும் உதவுகிறது. புண்களை குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் வீக்கத்திற்கு சிகிச்சையளிக்கிறது. ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மஞ்சளை உட்கொள்ளலாம். தூங்குவதற்கு முன் பாலுடன் சாப்பிடலாம். டிடாக்ஸ் மஞ்சள் டீ மற்றும் மஞ்சள்-புதினா சட்னிகளை வீட்டில் எளிதாக தயாரித்தும் பயன் பெறலாம்.

தண்ணீர் :

உடலை சுறுசுறுப்பாகவும், நீரேற்றமாகவும், பாதிக்கப்படாமலும் இருக்க, தினமும் தேவையான அளவு குடிப்பது கட்டாயம். தடுப்பூசிக்குப் பிறகு சில நாட்களுக்கு தாராளனான நீரினை அருந்த வேண்டும். தடுப்பூசிகளின் எந்தவொரு பக்க விளைவுகளையும் நீர் குறைக்கும் என்று கூறப்படுகிறது. வீட்டில் தயாரிக்கப்பட்ட சூப்கள், ஆர்கானிக் டீக்கள், பழச்சாறுகள் போன்றவற்றிலும் நீர் உட்கொள்ளலை அதிகரிக்கும். அறை வெப்பநிலையில் தண்ணீர் வைத்திருந்து குடிப்பது நன்மை பயக்கும்.

முழு தானியங்கள் :

நார்ச்சத்து நிறைந்த முழு உணவுகள் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும். முழு தானியமாக இருக்கும் ரவை, தினை, குயினோவா, பழுப்பு அரிசி, சோளம், பாப்கார்ன், முழு தானிய ரொட்டிகள் அல்லது சப்பாத்திகள், ஓட்ஸ் ஆகியவற்றில் அதிக அளவில் நார்ச்சத்துகள் அடங்கி உள்ளன. ராகி, கம்பு, சோளம் ஆகியவற்றை உட்கொள்ள வேண்டும். முழு தானியத்தை உள்ளடக்கிய சில இந்திய சமையல் வகைகளான மூங் தால், மல்டிகிரெய்ன் தோசை, மெது வடை, உப்மா போன்றவற்றையும் சாப்பிடலாம்.

பதப்படுத்தப்பட்ட உணவு, சர்க்கரைகளை தவிர்த்தல் :

சர்க்கரை மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள் அதிகம் உள்ள உணவுகள் மன அழுத்தம், பதற்றம் மற்றும் தூக்க சிக்கல்களை வழிவகுக்கும் என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இயற்கையான சர்க்கரை கொண்ட பழங்கள் போன்ற ஆரோக்கியமான பொருள்களுக்கு மாறுவதன் மூலம் சர்க்கரை அளவை பூர்த்தி செய்ய முடியும் மற்றும் அவற்றை தேனுடன் சாப்பிடலாம். தடுப்பூசி போட்ட சில நாட்களுக்கு அனைத்து வகையான பதப்படுத்தப்பட்ட உணவுகள் தவிர்க்கப்பட வேண்டும். அதற்கு பதிலாக உலர்ந்த பழங்கள், வேகவைத்த சோளம், வேர்க்கடலை, காய்கறி சாலடுகள் மற்றும் காய்கறி சாண்ட்விச்கள் ஆகியவற்றை ஆரோக்கியமான சிற்றுண்டி உணவுகளாக சாப்பிட்டு வரலாம்.

நல்ல தூக்கம் :

சோர்வு மற்றும் உடல் வலி ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக தடுப்பூசி போடுவதற்கு முன்பு, உடலுக்கு போதுமான அளவு ஓய்வெடுக்க வேண்டியது அவசியம். எனவே, தடுப்பூசிக்கு ஒரு நாள் முன்னதாக ஒரு நல்ல இரவு தூக்கத்தைப் பெறுவது நல்லது. தூக்கத்தின் போது உடல் அதன் பாதுகாப்பு பொறிமுறையை மீண்டும் உருவாக்குவதால், தூக்கமின்மை ஒடுக்கப்பட்ட நோய் எதிர்ப்பு சக்திக்கு வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இது மன அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடுகளை தூண்டுகிறது. உடலில் இரத்த ஓட்டத்தை தொடர்ந்து வைத்திருப்பது முக்கியம் என்பதால், தடுப்பூசிக்குப் பிறகு சில வகையான உடற்பயிற்சிகளை மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

மதுவைத் தவிர்க்கவும் :

தடுப்பூசிக்குப் பிறகு, சிலருக்கு உடல் வலி, சோர்வு, காய்ச்சல் மற்றும் வலி போன்ற அறிகுறிகளும் ஏற்படக்கூடும். அத்தகைய நேரத்தில் மது உட்கொள்வது நீரிழப்புக்கு வழிவகுக்கும். மது அருந்துவதால் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசிக்கு பிறகு, சில நாட்களுக்கு தவிர்ப்பது நல்லது என ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Post jab diet foods to strengthen immunity and maximise the effects of covid 19 vaccine

Next Story
மார்டன் டிரெஸைவிட புடவைதான் பிடிக்கும்.. ரச்சிதா கேரியர் ஸ்டோரி
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express