Advertisment

இதய நோயாளிகள் உணவுக்குப் பின் நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லதா?

சாப்பிட்ட உடனேயே மிகவும் கடினமான செயல்களில் ஈடுபடுவது, இதயக் கோளாறு உள்ளவர்களுக்கு அசௌகரியம், அஜீரணம் அல்லது ஆஞ்சினா போன்ற அபாயத்தை அதிகரிக்கும்.

author-image
WebDesk
New Update
walk

Are post-meal walks advisable for those with a history of heart disease?

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

உணவுக்குப் பிறகு நடப்பது செரிமானத்திற்கு உதவுவது மட்டுமல்லாமல்  ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் சிறந்ததாகக் கருதப்படுகிறது. நீண்ட நேரத்துக்கு பிறகு நீங்கள் ஓய்வெடுக்கவும், புத்துணர்ச்சி பெறவும் இது உதவுகிறது.

Advertisment

ஆனால், கடந்த காலத்தில் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களின் நிலை என்ன?

சமீபத்தில் பிரபலமான யூடியூப் போட்காஸ்டில், டாக்டர் விஷாகா ஷிவ்தாசானி, இதய நோய் வரலாறு உள்ளவர்கள் உணவுக்குப் பின் நடைப்பயிற்சி மேற்கொள்ளவே கூடாது, அதற்குப் பதிலாக, சாப்பிடுவதற்கு முன் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம், என்று பரிந்துரைத்தார்.

க்ரீன்வில்லி டெய்லி ரிஃப்ளெக்டரில் 2023 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கட்டுரையில், உணவியல் நிபுணரும், கிழக்கு கரோலினா பல்கலைக்கழகத்தின் பிராடி ஸ்கூல் ஆஃப் மெடிசின் துணைப் பேராசிரியருமான கேத்தி கோலாசா, “உணவுக்குப் பின் நடப்பது மேம்படுத்தப்பட்ட செரிமானம், உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் என்பதற்கான சான்றுகள் உள்ளன, என்றார். இதில் பதட்டம் குறைதல் மற்றும் மேம்பட்ட தூக்கம் ஆகியவை அடங்கும்.

இதைப் பற்றி  மேலும் புரிந்து கொள்ள டாக்டர் ஜெகதீஷ் ஜே ஹிரேமத்திடம் (medical director and chairman Aasra Hospitals, Bengaluru) சாத்தியமான அபாயங்கள், பரிசீலனைகள் மற்றும் உணவுக்குப் பிந்தைய நடைப்பயணத்திற்கான மாற்று வழிகள் பற்றி பேசினோம்.

இதய நோயாளிகளுக்கு உணவுக்குப் பின் நடப்பதில் இருக்கும் அபாயங்கள்

பொதுவாக, லேசானது முதல் மிதமான உடல் செயல்பாடு, சாப்பிட்ட பிறகு நடப்பது உட்பட, இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று டாக்டர் ஹிரேமத் விவரிக்கிறார்.

இருப்பினும், இதய நோயின் வரலாற்றைக் கொண்ட நபர்கள் உடற்பயிற்சியின் தீவிரம் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இந்த நேரத்தில் செரிமான அமைப்புக்கு குறிப்பிடத்தக்க ரத்த விநியோகம் தேவைப்படுவதால், சாப்பிட்ட உடனேயே அதிக தீவிரம் கொண்ட உடற்பயிற்சி இதயத்தை கஷ்டப்படுத்தும்.

சாப்பிட்ட உடனேயே மிகவும் கடினமான செயல்களில் ஈடுபடுவது, இதயக் கோளாறு உள்ளவர்களுக்கு அசௌகரியம், அஜீரணம் அல்லது ஆஞ்சினா போன்ற அபாயத்தை அதிகரிக்கும்.

முன்னெச்சரிக்கை

டாக்டர் ஹிரேமத் அவர்கள் உணவுக்குப் பின் நடைப்பயணத்தை அனுபவிக்கவும், உடல்நல அபாயங்களைத் தவிர்க்கவும் விரும்பினால், பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கிறார்.

டைமிங்

நடைப்பயணத்தைத் தொடங்குவதற்கு முன் சாப்பிட்ட பிறகு குறைந்தது 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை காத்திருப்பது செரிமான செயல்முறை தொடங்கியிருப்பதை உறுதிப்படுத்த உதவுகிறது, இது இதயத்தில் ஏற்படக்கூடிய சிரமத்தை குறைக்கிறது.

காலம்

உணவுக்குப் பிறகு விறுவிறுப்பான நடைப்பயிற்சி விட மென்மையான உலாவைத் தேர்ந்தெடுப்பது மிகவும் பொருத்தமானது. கால அளவு பொதுவாக 30 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும், குறிப்பாக தனிநபரின் ஃபிட்னெஸ் நிலை அதிகமாக இல்லை என்றால்.

உணவுக்கு முன் நடைபயிற்சி

சிலர் உணவுக்கு முந்தைய நடைப்பயணத்தை மிகவும் வசதியாகவும் பயனுள்ளதாகவும் காணலாம். உணவுக்கு முன் உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது கிளைசெமிக் கட்டுப்பாட்டிற்கு உதவும் மற்றும் உடல் உணவை ஒரே நேரத்தில் ஜீரணிக்காததால் இதயத்தில் எளிதாக இருக்கலாம்.

walk

உணவுக்குப் பிந்தைய உடல் செயல்பாடுகளின் தாக்கம்

சரியான முறையில் செய்தால், உணவிற்குப் பிந்தைய நடைபயணங்கள், உடலில் அதிகப்படியான அழுத்தத்தைத் திணிக்காமல், அடிப்படை நிலைமைகளைக் கொண்டவர்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம் என்று டாக்டர் ஹிரேமத் கூறுகிறார். அதில்

செரிமானம்

உணவுக்குப் பின் லேசான நடைபயிற்சி, வயிறு மற்றும் குடலைத் தூண்டுவதன் மூலம் செரிமானத்திற்கு உதவும், உப்பிசம் அல்லது வாயு போன்ற அறிகுறிகளைக் குறைக்கும். இருப்பினும், சாப்பிட்ட உடனேயே தீவிர உடற்பயிற்சி செரிமானத்தை சீர்குலைக்கும்.

ரத்த சர்க்கரை அளவு

நடைபயிற்சி, உணவுக்கு முன் அல்லது பின், ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. உணவுக்குப் பிந்தைய நடைப்பயிற்சி உணவுக்குப் பின் குளுக்கோஸ் அளவைக் குறைப்பதில் குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும்.

இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இதயத் துடிப்பு அதிகமாக அதிகரிப்பதைத் தவிர்க்க, மிதமான நடை பராமரிப்பது முக்கியம்

இதய நோயாளிகளுக்கு உணவுக்குப் பின் மாற்று நடவடிக்கைகள்

இதய நோயாளிகளுக்கு உணவுக்குப் பிந்தைய மாற்று நடவடிக்கைகளை ஆராய்வது உடல் ஆரோக்கியம் மற்றும் உணர்ச்சி நல்வாழ்வை மேம்படுத்த உதவும். டாக்டர் ஹிரேமத் அங்கீகரித்த சில விருப்பங்கள் இங்கே:

லேசான ஸ்ட்ரெட்ச் அல்லது யோகாவில் ஈடுபடுவது உணவுக்குப் பிறகு ஓய்வெடுக்க ஒரு நிதானமான வழியாகும், இதயத்தை கஷ்டப்படுத்தாமல் மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மைகளை வழங்குகிறது.

இந்த நடைமுறைகள் மன அழுத்தத்தைக் குறைக்கவும், ரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பைக் குறைப்பதன் மூலம் இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.

படிப்பது, இசையைக் கேட்பது அல்லது மனதைத் தளர்த்தும் பிற பொழுதுபோக்குகள் போன்ற செயல்பாடுகள் மன அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்திற்கு மறைமுகமாகப் பயனளிக்கும்.

Read in English: Are post-meal walks advisable for those with a history of heart disease?

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment