திருமணத்திற்குப்பின் ஏற்படும் மனசோர்வை எதிர்கொள்ளும் எளிய வழிகள்

Post wedding blues: எளிமையாக கூறவேண்டுமெனில், திருமண கொண்டாட்டங்களுக்குப்பின் ஏற்படும் ஒருவித மனசோர்வு. அது ஒருவித உணர்வு

எளிமையாக கூறவேண்டுமெனில், திருமண கொண்டாட்டங்களுக்குப்பின் ஏற்படும் ஒருவித மனசோர்வு. அது ஒருவித உணர்வு. திருமணம் முடிந்துவிட்டது, வாழ்க்கை துவங்கிவிட்டது என்ற உணர்வு. இது நீங்கள் நினைப்பதைவிட இயல்பான ஒன்று.
நிறைய தம்பதிகள் திருமணத்தை தங்கள் வாழ்வின் ஒரு மைல் கல்லாக கருதுகின்றனர். திருமணம் என்பது இரு குடும்பங்கள், கலாச்சாரங்கள் இணைவதுடன் காதலை கொண்டாடும் ஒரு மகிழ்ச்சி நிறைந்த தருணம். அதற்கான திட்டங்கள் பல மாதத்திற்கு முன்னரே துவங்கிவிடும். மற்ற விஷயங்களைவிட திருமணத்திற்கு தேவையான ஆடைகள் எடுக்க வேண்டும். திருமண விருந்தினர்கள் பட்டியல் தயாரிக்க வேண்டும். திருமண மண்டபத்தை தேர்வு செய்து, முன்பதிவு செய்ய வேண்டும். தேன்நிலவுக்கு எங்கு செல்வது, எப்படி செல்வது என்பது குறித்தும் திட்டமிடவேண்டும். இதுகுறித்து திட்டமிட சில காலம் போதுமானது. எல்லாம் அசுரவேகத்தில் நல்லபடியாக முடிவடைந்து, உண்மையான வாழ்க்கையை தொடங்கவேண்டும். திருமணத்திற்கு பின் ஏற்படும் பயங்கள், மனச்சோர்வுகளாக மாறத்துவங்கிவிடும். ஆண்களைவிட பெண்கள், இதை சமாளிக்க முடியாமல் அதிகளவில் அல்லறுகிறார்கள் என்று கூறுப்படுகிறது.

திருமணத்திற்கு பின் ஏற்படும் மனச்சோர்வு என்றால் என்ன?

எளிமையாக கூறவேண்டுமெனில், திருமண கொண்டாட்டங்களுக்குப்பின் ஏற்படும் ஒருவித மனசோர்வு. அது ஒருவித உணர்வு. திருமணம் முடிந்துவிட்டது, வாழ்க்கை துவங்கிவிட்டது என்ற உணர்வு. இது நீங்கள் நினைப்பதைவிட இயல்பான ஒன்று. உலகளவில் திருமணம் செய்துகொண்ட பெரும்பாலான பெண்களுக்கு ஏற்படக்கூடிய ஒன்று. சில நேரங்களில், அது மணமகன்களையும் பாதிக்கிறது. உண்மையில் நிறைய ஆய்வுகள் இதை தெரிவிக்கின்றன. அமெரிக்காவில், பவுலிங் கிரீன் ஸ்டேட் பல்கலைக்கழகம் 2018ம் ஆண்டு நடத்திய ஆய்வில், 152 பேர் பங்கேற்றனர். அதில் 12 சதவீதம் பேர் திருமணத்திற்கு பின்னர் மன அழுத்தத்தை உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர். திருமணத்திற்குப்பின் சிறிது சோர்வாக இருப்பது இயல்பான ஒன்றுதான் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், இந்த சோர்வு உங்கள் திருமண வாழ்க்கையை எதிர்மறையாக பாதிக்கும். ஆனால் அது உங்கள் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்துவதாக உணர்ந்தீர்கள் என்றால், அதற்கான தீர்வுகள் குறித்து நீங்கள் சிந்திக்க வேண்டும்.

திருமண சடங்கும், திருமண வாழ்க்கையும்

திருமண சடங்குகளுக்கும், திருமண வாழ்க்கைக்கும் இடையே வேறுபாடு உள்ளது என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். திருமண சடங்குகள் முடிந்திருக்கலாம். திருமண வாழ்க்கை என்பது அப்போதுதான் தொடங்கியிருக்கும். உங்கள் திருமண நாளில் நீங்கள் கொண்டாட்டமாக கழித்த பொழுதுகளில் இருந்து, மீதியுள்ள திருமண வாழ்க்கையின் மீது உங்கள் கவனத்தை திருப்ப வேண்டும். உங்கள் உறவை மேம்படுத்திக்கொள்வதற்காக செயல்படவேண்டும்.

உணர்வுகளை முறைப்படுத்துதல்

குறிப்பாக பெண்களுக்கு, திருமணம் என்பது சில விஷயங்களை பொறுத்துக்கொள்ள வேண்டிய சங்கடங்களை ஏற்படுத்தும் ஒன்றாகும். ஏனெனில் பெரும்பாலான பெண்களுக்கு திருமணம் என்பது அவர்களின் வசதியான இடத்தைவிட்டு, அவர்களின் வீட்டைவிட்டு வந்து அடுத்த குடும்பத்தினிருடன் ஒரு புது வாழ்க்கையை வாழ்வதாகும். அது அவர்களை கவலைக்குள்ளாகும். மேலும் அவர்களின் குடும்பத்தை இழப்பார்கள். இந்த நேரத்தில் பலவிதமான உணர்வுகளுக்கு அவர்கள் ஆட்படுவார்கள். இந்த நேரத்தில் அவர்களை தவிர்க்காமல், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அதை முறைப்படுத்துவது முக்கியமான ஒன்றாகும். இந்த சோர்வு தவிர்க்க முடியாத ஒன்று. அதனால், நீங்கள் அவர்களுடன் இணைந்து இருக்க வேண்டும். நேர்மறையான சிந்தனைகளுடன் புதிய வாழக்கையை தொடருங்கள்.

 

கணவன், மனைவி நேரம்

உங்கள் இணையருடன் நேரத்தை செலவிடுங்கள். ஏற்கனவே கூறியதுபோல் அவர் மீதான உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள். உங்களுக்கு ஆண்டுக்கணக்காக அவரை தெரியும் என்றாலும், நீங்கள் திருமணம் செய்திருக்கும் இந்த வேளையில், அந்த உறவை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது. மேலும் நினைவில் கொள்ளுங்கள், இது அவர்களுக்கு, இதுதான் உண்மை என்று புரிந்துகொண்டு அதை ஏற்றுக்கொள்ள முயலும் காலம். அவர்களுடனான நெருக்கத்தை மேலும் அதிகரித்துக்கொண்டு, அவர்களுக்கு வசதியான சூழலை ஏற்படுத்திக்கொடுத்து, மனச்சோர்வில் இருந்து அவர்கள் வெளியேற உதவி செய்யுங்கள்.

ஒவ்வொரு நாளையும் இனிமையாக்குங்கள்

திருமண வாழ்க்கையில், திருமண சடங்குகள் மற்றும் கொண்டாட்டங்கள் மற்றும் தேன்நிலவே ஆச்சர்யமான விஷயங்கள், மற்றபடி திருமண வாழ்க்கை என்பது முடிவில் சலிப்பான ஒன்றாகத்தான் இருக்கும் என்று பலரும் எண்ணுகிறார்கள். ஆனால், அது அப்படி இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நீங்கள் இன்பமான இரவு விருந்து, வாரஇறுதிநாட்களில் ஊர் சுற்றுவது, இரவு படக்காட்சிகள் அல்லது உங்களுக்கு பிடித்த ஏதாவது ஒன்றை இருவரும் சேர்ந்து செய்வது போன்ற சுவாரஸ்மான விஷயங்களை திட்டமிட்டு செயல்படுத்தி ஒவ்வொரு நாளையுமே சுவாரஸ்யமானதாக ஆக்கலாம்.

ஆலோசனை

உறவுகளை மேம்படுத்தும் ஆலோசகரிடம், திருமணத்திற்கு முன்னரும், பின்னரும் தேவைப்பட்டால், ஆலோசனை எடுத்துக்கொள்ளலாம். இதை பிரச்னையாக கருதி வெட்கப்படவேண்டாம். உங்கள் உறவை ஆரோக்கியமாகவும், திருமண வாழ்க்கையை மகிழ்ச்சி நிறைந்ததாகவும் வைத்துக்கொள்ள உதவும் எந்த விஷயத்தை தொடர்ந்து செய்தாலே உங்கள் வாழ்க்கை சந்தோஷமாக அமையும்.

தமிழில் : R. பிரியதர்சினி

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close