தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் மிகவும் மகிழ்ச்சியான தருணம். இருப்பினும் அது அவ்வளவு சுலபமானதும் இல்லை. வாந்தி, தலைச்சுற்றல், குமட்டல், சோர்வு என இந்நாளில் கர்ப்பிணிகள் உடல் ரீதியாக பல சிக்கல்களை சந்திக்கின்றனர். அதில் ஒன்று பிரசவத்துக்கு பிறகு எடை அதிகரிப்பு. இந்த கட்டத்தில் எடை இழப்புக்கான அணுகுமுறை முக்கியமானது.
ஆச்சரியப்படும் விதமாக, அந்த கூடுதல் எடையை குறைப்பதற்கான ஒரு சிறந்த வழி, நெய்யில் உள்ளது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
நெய்யை உங்கள் உணவில் புத்திசாலித்தனமாக சேர்த்துக் கொண்டால், கர்ப்பத்திற்குப் பிந்தைய எடை இழப்புக்கான தேடலில், உங்கள் சிறந்த நண்பராக முடியும் என்று ஊட்டச்சத்து நிபுணர் பக்தி கபூர் கூறினார். (nutritionist, wellness consultant, and founder – Healthy High, Mumbai)
குழந்தை ஊட்டச்சத்து நிபுணர் மோனா நருலாவின் கூற்றுப்படி, நெய் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது, பசியைக் குறைக்கிறது மற்றும் நல்ல செரிமானத்தை ஆதரிக்கிறது. ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த, நெய் ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்துகிறது.
நெய் பாரம்பரிய உணவுகளில் நீண்ட காலமாக பொக்கிஷமாக உள்ளது. சமையல் பயன்பாடுகளுக்கு அப்பால், பிரசவத்துக்கு பிந்தைய எடை இழப்புக்கு உதவும் பண்புகளை நெய் கொண்டுள்ளது, என்று கூறும் பக்தி கபூர் அதன் காரணிகளை பட்டியலிட்டார்.
கொழுப்பு எரிப்பான் (Fat burner)
அனைத்து கொழுப்புகளும் எடை இழப்புக்கு தடையாக இருக்கும் என்பது தவறான கருத்து. ஒமேகா -3 மற்றும் ஒமேகா -6 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த நெய், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது, கொழுப்பு உடைவதை எளிதாக்குகிறது மற்றும் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.
நெய்யின் தனித்துவமான கலவை, ஆற்றலாக திறம்பட மாற்ற அனுமதிக்கிறது, எடை இழப்பு முயற்சிகளுக்கு பங்களிக்கிறது.
/indian-express-tamil/media/media_files/8ebYAt7HTB7aJrbjNveC.jpg)
வைட்டமின் உறிஞ்சுதல்
பிரசவத்துக்கு பிறகு சமநிலையை மீட்டெடுக்க அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகிறது. நெய், கரையக்கூடிய கொழுப்பு- வைட்டமின்களான டி, ஏ, ஈ மற்றும் கே போன்றவற்றை உறிஞ்சுவதை மேம்படுத்துகிறது.
இந்த வைட்டமின்கள் எலும்பு ஆரோக்கியத்தை பராமரிக்கின்றன, நோயெதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்கின்றன மற்றும் ஹார்மோன் சமநிலையை ஒழுங்குபடுத்துகின்றன. நெய்யின் இயற்கையான கொழுப்பு உள்ளடக்கம் ஒரு கேரியராக செயல்படுகிறது, பயனுள்ள வைட்டமின் பயன்பாட்டை உறுதி செய்கிறது.
குடல் ஆரோக்கியம் காக்க
ப்யூட்ரிக் அமிலத்தால் செறிவூட்டப்பட்ட நெய், குடல் ஆரோக்கியத்துக்கு சிறந்தது. பியூட்ரிக் அமிலம் ஆரோக்கியமான குடல் புறணி மற்றும் நன்மை பயக்கும் பாக்டீரியா வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. ஒரு செழிப்பான குடல் நுண்ணுயிரி செரிமானத்தை மேம்படுத்துகிறது, பசியைக் குறைக்கிறது மற்றும் வளர்சிதை மாற்ற செயல்பாடுகளை மேம்படுத்துகிறது.
நெய் நல்ல பாக்டீரியா வளர்ச்சியை ஆதரிக்கிறது, ஆரோக்கியமான குடலை பராமரிக்கிறது மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளைத் தடுக்கிறது என்று கபூர் கூறினார்.
மனதில் கொள்ள வேண்டியவை
வளர்சிதை மாற்றத்தை விரைவுபடுத்துவதற்கும், ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்துவதற்கும், செழிப்பான குடல் சூழலை மேம்படுத்துவதற்கும் அதன் திறன், அந்த கூடுதல் எடைகளை குறைப்பதில் நெய்யை ஒரு தவிர்க்க முடியாத கூட்டாளியாக ஆக்குகிறது, என்று நிபுணர்கள் பரிந்துரைத்தனர்.
இருப்பினும், மிதமான உட்கொள்ளல் முக்கியமானது. சீரான உணவின் ஒரு பகுதியாக நெய்யைச் சேர்த்துக்கொள்வது, உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை தேர்வுகளுடன், அதன் பலன்களை நீங்கள் முழுமையாகப் பெறுவதை உறுதிசெய்கிறது, என்று கபூர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“