இப்படி ஒரு முறை உருளைக்கிழங்கு போண்டா செய்து பாருங்க. எல்லாரும் விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.
தேவையான பொருட்கள்
4 உருளைக் கிழங்கு
1 வெங்காயம்
2 ஸ்பூன் அரிசி மாவு
1 ஸ்பூன் கடலை மாவு
1 ஸ்பூன் பூண்டு நறுக்கியது
1 ஸ்பூன் இஞ்சி நறுக்கியது
1 ஸ்பூன் மஞ்சள் பொடி
1 ஸ்பூன் மிளகாய் பொடி
1 ஸ்பூன் மிளகு பொடி
தேவையான அளவு உப்பு
பொறிக்கும் அளவு எண்ணெய்
செய்முறை: உருளைக் கிழங்கை நன்றாக வேக வைத்துகொள்ளவும். அதை தோல் நீக்கி மசிக்கவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கு மசித்ததை சேர்த்துகொள்ளவும். அதில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்க்கவும். தொடர்ந்து அரிசி மாவு, கடலை மாவு, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, உப்பு, மிளகு பொடி சேர்த்து நன்றாக பிசைந்துகொள்ளவும். வேண்டும் என்றால் 15 நிமிடங்கள் ஊற வைக்கலாம். தொடர்ந்து எண்ணெய்யை சுடாக்கி சிறு சிறு உருண்டைகளாக பொறித்து எடுக்கவும். சுவையான உருளைக்கிழங்கு போண்ட ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“