சுவையான உருளைக் கிழங்கு சீஸ் கட்லெட் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
உருளைக் கிழங்கு- 4
பச்சை மிளகாய்- 2
மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
கரம் மசாலாதூள்- 1 ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
எண்ணெய்- தேவையான அளவு
பிரெட் தூள்- 1 கப்
மைதா- 1 ஸ்பூன்
மயோனிஸ்- 3 ஸ்பூன்
சீஸ் - துருவியது 1 கப்
செய்முறை
முதலில் உருளைக் கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு மசித்துக் கொள்ள வேண்டும். அதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய், மிளகாய்தூள், கரம் மசாலாதூள், பிரெட் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பிசையவும்.
இப்போது மற்றொரு சிறிய பாத்திரத்தில் மயோனிஸ் மற்றும் துருவிய சீஸ் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். மற்றொரு பாத்திரத்தில் மைதா மாவுடன் நீர் சேர்த்து கரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். இப்போது ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள உருளைக் கிழங்கு கலவை கையில் கொஞ்சம் எண்ணெய் தடவிக் சிறிய உருண்டைகளாக உருட்டி அதன் நடுவே மயோ, சீஸ் கலவையை வைத்து தட்டவும்.
இதனை மைதா கரைசலில் முக்கி எடுத்து பிரெட் தூளில் பிரட்டி எடுத்து ஒரு பிளேட்டில் வைக்கவும். இதே போன்று எல்லாவற்றிக்கும் செய்யவும். அடுத்து அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி பொரித்து எடுத்தால் சுவையான உருளைக் கிழங்கு சீஸ் கட்லெட் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“